அறக்க பறக்க ரீசார்ஜ்.. மட்ட ரேட்ல 84 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள்.. 6 ஜிபி டேட்டா.. விஐ கஸ்டமர்கள் குஷி!
வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்களுக்கு மலிவான விலைக்கு டேட்டாவுடன் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் வேண்டுமானால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல், லம்ப்-சம் டேட்டா மற்றும் லம்ப்-சம் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வோடபோன் ஐடியா ரூ.509 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs.509 Plan Details): தினசரி டேட்டா சலுகை கிடைக்காமல், லம்ப்-சம் முறையில் மொத்தமாக டேட்டா சலுகை கொடுக்கப்படும் திட்டங்களில் அதிக வேலிடிட்டி கிடைக்கும். அதேபோல இந்த திட்டத்துக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், இந்த வேலிடிட்டி முழுவதுக்கும் 6 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும்.

அதே நேரத்தில் 6 ஜிபி டேட்டா முடிந்த பிறகு போஸ்ட் டேட்டாவை எதிர்பார்க்க முடியாது. அதேபோல எஸ்எம்எஸ் சலுகையும் தினசரிக்கு கிடைக்காது. மொத்தமாக 1000 எஸ்எம்எஸ்கள் ஒதுக்கப்படும். இதை 84 நாட்கள் முழுவதும் தேவைக்கு ஏற்ப அனுப்பி கொள்ள வேண்டும். முன்கூட்டியே முடித்துவிட்டால், அதன்பிறகு கட்டணம் செலுத்தி எஸ்எம்எஸ்களை அனுப்ப வேண்டிவரும்.
இந்த சலுகைகள் மட்டுமே லம்ப்-சம் முறையில் கிடைக்கும். ஆனால், வாய்ஸ் கால் சலுகைகள் அப்படியில்லை. இந்த திட்டத்தில் கிடைக்கும் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) கொடுக்கப்படும். இந்த சலுகைகள் மட்டுமே இந்த திட்டத்துக்கு கிடைக்கின்றன. கூடுதல் சலுகைகள் ஏதும் கிடைக்காது.
ஒருவேளை உங்களுக்கு தினசரி டேட்டா, ஓடிடி மற்றும் கூடுதல் சலுகைகள் வேண்டுமானால், வோடபோன் ஐடியா ரூ.579 திட்டம் இருக்கிறது. இது ரூ.70 விலை அதிகமாக கிடைத்தாலும் சலுகையில் பின்னிப்பெடல் எடுக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைப்பது, கஸ்டமர்களுக்கு மேலும் லாபத்தை தரக்கூடியதாக இருக்கிறது.
வோடபோன் ஐடியா ரூ.579 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs.579 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிக டேட்டா சலுகைகள் கிடைப்பதால், வேலிடிட்டி குறைவாக கிடைக்கிறது. அதாவது, முந்தைய திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தது. இந்த திட்டத்தில் 56 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் தினமும் 1.5 ஜிபி டேட்டா பயன்படுத்த கிடைக்கும்.
இதுபோக 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும், விஐ 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கிடைக்கிறது. இந்த டேட்டா சலுகைகள் போக பிஞ்ச் ஆல் நைட் டேட்டா (Binge All Night Data), வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) மற்றும் டேட்டா டிலைட்ஸ் (Data Delights) சலுகைகள் கிடைக்கின்றன.
இப்படி டேட்டா சலுகைகள் வாரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அதிகப்படியான டேட்டாவுக்கு ஏற்ப ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவும் கொடுக்கப்படுகிறது. ஆனால், இந்த சந்தாவை 1 மாதத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அதேபோல விஐ ஆப் மூலம் கிளைம் செய்து கொள்ள வேண்டும். மேலும், எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் வழக்கம்போல கிடைக்கின்றன.
ஆகவே, 56 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். ஆகவே, அதிக வேலிடிட்டி மற்றும் குறைவான டேட்டாவுக்கு முதலாவது திட்டத்தை பெறலாம். அதிகப்படியான டேட்டாவை விரும்பினால், இரண்டாவது திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








