Home
News

ரீசார்ஜ் செய்யுற எல்லோருக்கும் 1 வருஷத்துக்கு FREE.. Jio-கிட்ட கூட இல்லாத புது வகை Offer-ஐ அறிவித்த Vodafone!

2 திட்டங்களின் மீது ரூ.30 வரை விலை உயர்வை அறிவித்த கையோடு, இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா லிமிடெட் (VIL), தனது பிரபலமான ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றில், 1 வருடம் செல்லுபடியாகும் இலவச கூடுதல் சேவை ஒன்றை சேர்த்துள்ளது.

அந்த இலவச சேவை - நார்டன் மொபைல் செக்யூரிட்டி (Norton Mobile Security) சேவை ஆகும். இந்த சேவைக்கான 1 வருட சந்தா, தற்போது வோடபோன் ஐடியாவின் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தின் (Vodafone Idea Rs 499 Prepaid Plan) கீழ் அணுக கிடைக்கிறது.

1 வருஷத்துக்கு FREE.. புது வகை Offer-ஐ அறிவித்த Vodafone!

தற்போது இந்த துறையில் (இந்திய டெலிகாம் துறையில்) நுகர்வோருக்கு மொபைல் பாதுகாப்பு சேவையை வழங்கும் ஒரே தொலைத்தொடர்பு நிறுவனம் - வி என்கிற வோடபோன் ஐடியா மட்டுமே ஆகும்என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது, அதாவது எந்தவொரு ஜியோ மற்றும் ஏர்டெல் திட்டத்தின் கீழும் இப்படி ஒரு நன்மை கிடைக்கவில்லை.

வோடபோன் ஐடியாவின் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தின் விரிவான நன்மைகள்: வோடபோன் ஐடியாவின் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் 20 ஜிபி டேட்டா மற்றும் 1 வருட வேலிடிட்டி உடன் வருகிறது. கூடுதலாக இது ஒரு வருடத்திற்கான நார்டன் மொபைல் செக்யூரிட்டி கவரேஜையும் வழங்குகிறது

நார்டனின் அதிகாரப்பூர்வ இணையதளம் இதே பாதுகாப்பு திட்டத்தை ஒரு வருடத்திற்கு ரூ.699 க்கு விற்பனை செய்கிறது. ரூ.1,399 க்கு இரண்டு வருட பேக்கேஜும் உள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வாடிக்கையாளர்கள் ஆகிய இருவருக்குமே இதே விலை பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளவும்.

ஆனால் வோடபோன் ஐடியாவின் இணையதளம் (Vodafone Idea Website) அல்லது மொபைல் ஆப் (Vi Mobile App) மூலம் ரூ.499 வருடாந்திர திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம், 1 ஆண்டு முழுவதும் பயன்படுத்துவதற்கான நார்டன் மொபைல் செக்யூரிட்டி மெம்பர்ஷிப் உடன் சேர்த்து 20ஜிபி 4ஜி டேட்டா நன்மையும் உங்களுக்கு கிடைக்கும்.

நார்டன் மொபைல் செக்யூரிட்டி என்றால் என்ன? இதன் கீழ் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்> அறியாதோருக்கு நார்டன் மொபைல் செக்யூரிட்டி மூலம், உங்கள் டிவைஸ் ஆனது வைரஸ்கள் மற்றும் மால்வேர்களுக்கு எதிரான பாதுகாப்பை பெறும். இது ஸ்பேம்களை கண்டறிந்து, அதிலிருந்து உங்கள் டிவைஸை பாதுகாக்கும்.

நார்டன் மொபைல் செக்யூரிட்டி மெம்பர்ஷிப்பை பெறுவது எப்படி? ரூ.499 மதிப்புள்ள திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு, உங்கள் சந்தாவை பெறுவதற்கு பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரிலிருந்து நார்டன் மொபைல் செக்யூரிட்டி ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த திட்டம் அனைத்து தொலைத்தொடர்பு வட்டாரங்களிலும் உள்ள பயனர்களுக்கும் கிடைக்கிறது.

விலை உயர்த்தப்பட்ட 2 திட்டங்கள்: வோடபோன் ஐடியாவின் ரூ.649 நான்ஸ்டாப் ஹீரோ பேக் ஆனது ரூ.670 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. டெலிகாம்டால்க்கின் சமீபத்திய அறிக்கையின்படி - இந்த விலை மாற்றம் இப்போதைக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா, பீகார், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய வட்டங்களில் பிரதிபலிக்கிறது. இதேபோல வி ரூ.1020 திட்டமானது ரூ.1050 ஆக திருத்தப்பட்டுள்ளது.

முன்பு சென்னை பயனர்களுக்கு ரூ.1020 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த இந்த திட்டம், தற்போது ரூ.1050 ஆக திருத்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட வி நான்-ஸ்டாப் ஹீரோ ரூ.1050 திட்டமானது, வரம்பற்ற டேட்டா (5ஜி மற்றும் 4ஜி), வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 84 நாட்களுக்கு வழங்குகிறது. 5ஜி ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் சந்தாதாரர்கள், 5ஜி நெட்வொர்க் உள்ள பகுதிகளில் மட்டுமே வரம்பற்ற 5ஜி டேட்டாவை பயன்படுத்த முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 499 Prepaid Plan Now Offers 1 Year Norton Mobile Security With 20GB Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X