ரூ.475 போதும்.. டெய்லி 4ஜிபி டேட்டா, அன்லிமிடெட் சலுகைகள்.. சைலண்டாக ஆஃபர் வழங்கிய வோடபோன்..
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்குப் போட்டியாக அவ்வப்போது சலுகையை அறிவித்த வண்ணம் உள்ளது வோடபோன் ஐடியா. அதேபோல் மற்ற நிறுவனங்களை விடக் கூடுதல் சலுகைகளை வழங்குவது இந்த வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம். அதாவது வார இறுதி டேட்டா ரோல்ஓவர், பிங்கே ஆல் நைட் மற்றும் டேட்டா டிலைட்ஸ் போன்ற வழங்குகிறது இந்நிறுவனம்.
அதேபோல் எந்த ஒரு நிறுவனமும் கொடுக்காத ஆபரை வோடபோன் ஐடியா நிறுவனம் தனது பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கியுள்ளது. அதாவது வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.475 ப்ரீபெய்ட் திட்டத்தில் தான் அந்த அசத்தலான ஆஃபரை வழங்கி உள்ளது. இப்போது இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ.475 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs 475 Prepaid Plan) ஆனது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், பயனர்களுக்கு தினசரி 4ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கிறது. எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 112ஜிபி டேட்டா கிடைக்கும். இதுபோன்ற சலுகையை எந்த நிறுவனமும் பட்ஜெட் விலையில் வழங்கியது இல்லை. இதுதவிர பல்வேறு நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.
அதாவது வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.475 ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ், Vi Movie & TV கிளாசிக், வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர், பிங் ஆல் நைட் மற்றும் டேட்டா டிலைட் உள்ளிட்ட பல சலுகைகள் ரூ.475 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர 2ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.
எனவே வோடபோன் ஐடியா பயனர்கள் ரூ.475 ப்ரீபெய்ட் திட்டத்தில் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். இதில் அதிக பலன்கள் உள்ளன. மேலும் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
வோடபோன் ஐடியா வழங்கும் ரூ.3099 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் ஒரு வருட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்,Vi Movie & TV கிளாசிக், வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர், பிங் ஆல் நைட் மற்றும் டேட்டா டிலைட் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உள்ளன.
வோடபோன் ஐடியா வழங்கும் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 850ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Vi Movie & TV கிளாசிக், பிங் ஆல் நைட் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வோடபோன் ஐடியா வழங்கும் ரூ.2899 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Vi Movie & TV கிளாசிக், வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர், பிங் ஆல் நைட் மற்றும் டேட்டா டிலைட் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உள்ளன.
வோடபோன் ஐடியா வழங்கும் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம் மொத்தமாக 24ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், 3600 எஸ்எம்எஸ், Vi Movie & TV கிளாசிக் உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








