Home
News

ஒரே Vi ரீசார்ஜ்.. 84 நாட்கள் வேலிடிட்டி.. மாதம் ரூ.156 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. லம்ப்-சம் எஸ்எம்எஸ்!

வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்களுக்கு சிம் ஆக்டிவ் (SIM Active) மற்றும் வாய்ஸ் கால்கள் (Voice Calls) மட்டும் போதுமானால், அவர்களுக்கு மாதத்துக்கு ரூ.156 செலவில் 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) இருக்கிறது. இதில் எஸ்எம்எஸ் சலுகைகளையும் பெற்று கொள்ளலாம். இந்த வோடபோன் ஐடியா வாய்ஸ் ஒன்லி திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் ஆகிய மூன்று சலுகைகளை கொண்ட திட்டங்களை மட்டுமே ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் கொடுத்துவந்தன. ஆனால், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆனது, வாய்ஸ் கால்களை மட்டுமே கொண்ட திட்டங்களையும் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் கொடுக்க வேண்டும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுபடி அடிமட்ட விலைக்கு சிம் ஆக்டிவ் மற்றும் வாய்ஸ் கால்கள் சலுகை கொடுக்கப்படும் ப்ரீபெய்ட் திட்டங்கள் களமிறக்கப்பட்டன. ஆனால், 84 நாட்கள், 365 நாட்கள் என்று அதிக வேலிடிட்டியுடன் மட்டுமே கிடைக்கின்றன. இருப்பினும், இதற்கான மாத செலவானது, டேட்டா சலுகை கிடைக்கும் திட்டங்களைவிட மலிவாகவே இருக்கின்றன.

இப்படி வோடபோன் ஐடியாவில் 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் வாய்ஸ் ஒன்லி திட்டமாக ரூ 470 விலை கொண்ட திட்டம் களமிறங்கியது. ஆகவே, இந்த திட்டத்துக்கு மாதத்துக்கு செலவாகும் தொகை ரூ 156ஆக இருக்கிறது. இந்த விலையில் 28 நாட்கள் மட்டும் வேலிடிட்டி கொண்ட திட்டம் எந்த நிறுவனத்திலும் இல்லை. அதுவே 84 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்யும்பட்சத்தில் கிடைக்கிறது.

வோடபோன் ஐடியா ரூ 470 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 470 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதுக்கும் 900 எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இது லம்ப்-சம் சலுகையாக இருக்கிறது.

ஆகவே, இதற்கு நாளொன்றுக்கு இத்தனை எஸ்எம்எஸ் செய்ய வேண்டும் என்ற கணக்கு கிடையாது. வோடபோன் ஐடியா கஸ்டமர்களுக்கு தேவைப்படும்போது அனுப்பி கொள்ளலாம். ஆனால், 84 நாட்கள் வேலிடிட்டி முடிவதற்குள் முழுவதும் அனுப்பிவிட்டால், அதற்கு பிறகு கட்டணம் இருக்கும். இதுவே டேட்டாவுடன் அடிமட்ட விலைக்கு 84 நாட்கள் திட்டம் வேண்டுமானால்,

நீங்கள் ரூ.509 விலைக்கு கிடைக்கும் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை பெற்று கொள்ளலாம். ஆனால், இதில் தினசரி டேட்டா கிடைக்காது. லம்ப்-சம் டேட்டா சலுகை மட்டுமே கிடைக்கும். அதேபோல கூடுதலாக லம்ப்-சம் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. இந்த லம்ப்-சம் டேட்டா திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

வோடபோன் ஐடியா ரூ 509 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 509 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் அதே 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், கூடுதலாக டேட்டா சலுகை சேர்க்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 6 ஜிபி லம்ப்-சம் டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டா கிடைக்காது.

ஒரே Vi ரீசார்ஜ்.. 84 நாட்கள் வேலிடிட்டி.. மாதம் ரூ.156 போதும் பாஸ்!

ஆகவே, கட்டணம் இருக்கும். அதேபோல முந்தைய திட்டத்தில் 900 எஸ்எம்எஸ்கள் கிடைத்தது. இந்த திட்டத்தில் 1000 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படுகிறது. ஆனால், இதுவும் லம்ப்-சம் சலுகையிலேயே கிடைக்கிறது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போலவே இருக்கின்றன.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 470 Plan With Unlimited Voice Calls 900 SMS 84 Days Validity Check Voice Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X