இறங்கி ஆடும் வோடபோன்.. மாதம் ரூ.153 போதும்.. 3 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்!
ஜியோவுக்கு நிகராக மாதம் ரூ.153 செலவில் 84 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ், 6 ஜிபி டேட்டா மற்றும் ஓடிடி சலுகைகளை வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்குகிறது. 2024ஆம் ஆண்டில் 84 நாட்கள் வேலிடிட்டியில் மொத்தம் 4 திட்டங்கள் இருக்கின்றன.
வோடபோன் ஐடியா ரூ 459 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 459 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டம் மட்டுமே 84 நாட்கள் வேலிடிட்டியில் மிகவும் மலிவான விலைக்கு கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 6 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

இந்த 6 ஜிபிக்கு பிறகு எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படும். இந்த திட்டத்தில் 1000 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகைகள் கிடைக்கின்றன. இந்த சலுகைகள் போக விஐ மூவிஸ் மற்றும் டிவி (Vi movies & TV) சந்தா கிடைக்கிறது.
வோடபோன் ஐடியா ரூ 719 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 719 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆகவே, நாளொன்றுக்கு 1.5 ஜிபி வீதம் 126 ஜிபி டேட்டா சலுகைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். அதேபோல 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது.
முந்தைய திட்டத்தை போலவே, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் மற்றும் விஐ மூவிஸ் மற்றும் டிவி சந்தா கிடைக்கிறது. இதுபோக பிஞ்ச் ஆல் நைட் டேட்டா, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் மற்றும் டேட்டா டிலைட்ஸ் சலுகைகள் கிடைக்கின்றன. இந்த திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.
வோடபோன் ஐடியா ரூ 839 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 839 Plan Details): இந்த திட்டத்தில் கூடுதல் டேட்டா சலுகை மட்டுமல்லாமல், ஓடிடி சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, மொத்தமாக 168 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
அதேபோல தினசரி 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். இதுபோக பிஞ்ச் ஆல் நைட் டேட்டா, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் மற்றும் டேட்டா டிலைட்ஸ் சலுகைகள் மற்றும் 3 மாதங்களுக்கான டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் சலுகை கொடுக்கப்படுகிறது.
வோடபோன் ஐடியா ரூ 1066 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1066 Plan Details): 84 நாட்கள் திட்டத்தில் இதில் மட்டுமே அதிகப்படியான சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ், ஓடிடி சலுகைகள் அனைத்தும் கூடுதலாகவே கிடைக்கின்றன.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், தினசரி 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 168 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல தினசரி 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice Call) சலுகைகளை பெறலாம்.
இதுபோக பிஞ்ச் ஆல் நைட் டேட்டா (Binge All Night Data), வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover ) மற்றும் டேட்டா டிலைட்ஸ் (Data Delights) சலுகைகள் கிடைக்கின்றன. இவ்வளவு சலுகைகள் போக ஒரு வருடத்துக்கான டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சந்தா வழங்கப்படுகிறது. ஆகவே, திட்டத்தின் வேலிடிட்டி முடிந்தாலும், ஓடிடி சந்தா இருக்கும்.


Click it and Unblock the Notifications








