குஷியில் Vi கஸ்டமர்கள்.. ரூ.451 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 5ஜி டேட்டா.. ஓடிடி சந்தா.. நைட் டேட்டா!
வோடபோன் ஐடியாவின் (Vodafone Idea) போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), லம்ப்-சம் டேட்டா (Lump-sum Data), நைட் டேட்டா (Night Data), டேட்டா ரோலோவர் (Data Rollover), ஓடிடி சந்தா (OTT Subscription) போன்ற நம்ப முடியாத சலுகைகளுடன் ரூ.451 திட்டம் கிடைக்கிறது. இந்த வோடபோன் ஐடியா போஸ்ட்பெய்ட் திட்டத்தின் (Vodafone Idea Postpaid Plan) முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல், ஜியோ நிறுவனங்களுக்கு அடுத்த மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக இருக்கும் வோடபோன் ஐடியாவானது, மும்பை சர்க்கிளில் மட்டுமே ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா சேவையை தொடங்கி இருக்கிறது. இதில் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் மற்ற டெலிகாம் நிறுவனங்களை தூக்கி சாப்பிடும்படி இருக்கிறது.

வோடபோன் ஐடியா ரூ 451 போஸ்ட்பெய்ட் திட்டம் (Vodafone Idea Rs 451 Postpaid Plan): இந்த விஐ மேக்ஸ் (Vi Max) திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் நேஷனல் ரோமிங் (National Roaming) சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. 50 ஜிபிக்கான லம்ப்-சம் டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டாவுடன் அன்லிமிடெட் நைட் டேட்டா (Unlimited Night Data) கிடைக்கிறது.
ஆகவே, நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகைகள் போக 200 ஜிபிக்கான டேட்டா ரோலோவர் சலுகையை இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் கொடுக்கிறது. அதேபோல லம்ப்-சம் முறையில் அனுப்பிக் கொள்ளும்படி 3,000 எஸ்எம்எஸ்கள் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. விஐ கேம்ஸ் (Vi Games) சலுகைகள் இதில் கிடைக்கிறது.
இந்த சலுகைகளுக்கு அடுத்து ஓடிடி சந்தா கிடைக்கிறது. ஆனால், அதில் ஆப்ஷன்கள் இருக்கும். அதில் ஏதாவது ஒரு ஓடிடி சந்தாவை போஸ்ட்பெய்ட் கஸ்டமர்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டும். இந்த ஆப்ஷனில் மூன்று மாதங்களுக்கான விஐ மூவிஸ் & டிவி (Vi Movies & TV) சந்தா கிடைக்கிறது. இந்த சந்தா மூலம் ஜீ5, சோனிவில் மற்றும் ஜியோஹாஸ்டார் சந்தாவை பெற்று கொள்ள முடியும்.
அடுத்தது 1 வருடத்துக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவை ஆப்ஷனில் எடுத்து கொள்ளலாம். அதேபோல 360 நாட்களுக்கு சந்தா கொடுக்கும் சோனிலிவ் (SonyLiv) ஆப்-ஐ ஆப்ஷனில் எடுத்து கொள்ளலாம். இந்த ஓடிடிகள் வேண்டாம் என்னும் பட்சத்தில் ஈஸ்மைட்ரிப் (EaseMyTrip) சந்தாவை பெற்று கொள்ளலாம். இப்படி ஏகப்பட்ட சலுகைகள் கிடைக்கின்றன.
இதைவிட கூடுதல் டேட்டா மற்றும் ஓடிடி ஆப்ஷன்கள் தேவைப்படும்பட்சத்தில் வோடபோன் ஐடியா ரூ 551 போஸ்ட்பெய்ட் திட்டத்துக்கு கஸ்டமர்கள் செல்லலாம். இந்த திட்டத்திலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, லம்ப்-சம் டேட்டா, நைட் டேட்டா, கூடுதல் ஓடிடி ஆப்ஷன்கள் கிடைக்கிறது. இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வோடபோன் ஐடியா ரூ 551 போஸ்ட்பெய்ட் திட்டம் (Vodafone Idea Rs 551 Postpaid Plan): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்திலும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, நேஷனல் ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் அன்லிமிடெட் நைட் டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆனால், இதில் 90 ஜிபிக்கா லம்ப்-சம் டேட்டா கிடைக்கிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் இதற்கு கிடைக்கிறது.
முந்தைய திட்டத்தில் பார்த்த 200 ஜிபிக்கான டேட்டா ரோலோவர் மற்றும் 300 எஸ்எம்எஸ்கள் வருகிறது. ஓடிடி ஆப்ஷன்களை பார்க்கையில், 3 மாதங்களுக்கான விஐ மூவிஸ் & டிவி, 6 மாதத்துக்கான அமேசான் பிரைம் வீடியோ, 1 வருடத்துக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல், 360 நாட்களுக்கான சோனிலிவ் கிடைக்கிறது. மேலும், 1 வருட அனுகலுடன் ஸ்விக்கி சந்தா ஆப்ஷனில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








