Jio, Airtel-ஐ வச்சி செஞ்ச Vodafone.. 300GB 5ஜி டேட்டா, 50GB 4ஜி டேட்டா.. 365 நாள் இலவச OTT.. எந்த திட்டத்தில்?
பட்ஜெட் விலையில் ஒரு நல்ல போஸ்ட்பெய்ட் மொபைல் பிளானை தேடுகிறீர்கள் என்றால்.. ஜியோ மற்றும் ஏர்டெல்லின் கீழ் கிடைக்கும் திட்டங்களை பார்பதற்கு முன்பாக, இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா லிமிடெட்டின் போஸ்ட்பெய்ட் மொபைல் பிரிவை ஒரு முறை பார்க்கவும்.
ஏனென்றால் இந்நிறுவனம், போஸ்ட்பெய்ட் மொபைல் பிளானை தேடும் பயனர்களுக்காக ஒரு பெஸ்ட் என்ட்ரி லெவல் பிளானை தன்வசம் கொண்டுள்ளது. நாம் இங்கே பேசும் திட்டத்தின் விலை ரூ.451 ஆகும். கிட்டத்தட்ட எல்லா வட்டங்களிலும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் இந்த திட்டத்துடன் 5ஜி டேட்டா நன்மையும் கிடைக்கிறது.

வோடாபோன் ஐடியா நிறுவனமானது ஏற்கனவே கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் வட்டாரங்களிலும் அதன் 5ஜி சேவையை (Vi 5G Network) அறிமுகப்படுத்தி விட்டது என்பதும், தற்போது இந்நிறுவனம் அதன் சேவையை மேலும் விரிவுபடுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை நீங்கள் வோடபோன் ஐடியாவின் 5ஜி நெட்வொர்க் கிடைக்காத பகுதியில் இருந்துகொண்டு ரூ. 451 போஸ்ட்பெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் என்னவாகும்? வி ரூ.451 பிளானை ரீசார்ஜ் செய்த ஒரு வாடிக்கையாளருக்கு 5ஜி தகுதி இல்லாத பட்சத்தில், இந்நிறுவனம் 4ஜி டேட்டாவை வழங்கும்.
வோடபோன் ஐடியா ரூ.451 போஸ்ட்பெய்ட் மொபைல் திட்டத்தின் கீழ் வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? போஸ்ட்பெய்ட் பிரிவில் உள்ள வோடபோன் ஐடியாவின் ரூ.451 திட்டம், அதன் பயனர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், மாதத்திற்கு 3000 எஸ்எம்எஸ்கள் மற்றும் 50ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குகிறது.
மேலும் 200ஜிபி வரை டேட்டாவை அடுத்த மாதத்திற்கு எடுத்து செல்லும் டேட்டா ரோல்ஓவர் வசதியும் கூட இந்த திட்டத்தில் உள்ளது. மேலும், நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை பயனர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா பயன்பாடும் கிடைக்கும். இது நிறுவனத்தின் 'பிஞ்ச் ஆல் நைட்' சலுகை என்று அழைக்கப்படுகிறது.
சுவாரசியமாக இந்த பிஞ்ச் ஆல் நைட் சலுகை ஆனது, ரூ.451 திட்டத்துடன் வழங்கப்படும் 50ஜிபி எப்யுபி லிமிட்டை பாதிக்காது. தகுதியான வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி நன்மையும் கிடைக்கும். இது ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 300ஜிபி அதிவேக பயன்பாட்டிற்கு வரம்பிடப்பட்டுள்ளது; அதற்குப் பிறகு இண்டர்நெட் ஸ்பீட் கணிசமாக குறையும்.
கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை மொபைல் கிளவுட் கேமிங்கிற்கான வி கேம்ஸ் அணுகல் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் பின்வரும் இலவச நன்மைகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் வழங்கப்படும்: 3 மாதங்களுக்கு இலவச வி மூவிஸ் & டிவி சந்தா அல்லது ஒரு வருடத்திற்கு இலவச ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா அல்லது 360 நாட்களுக்கு இலவச சோனிலிவ் மொபைல் சந்தா அல்லது 1 வருட இலவச நார்டன் மொபைல் செக்யூரிட்டி.
ஒருவேளை நீங்கள் இதேபோன்ற நன்மைகளை ப்ரீபெய்ட் பிரிவின் கீழ் தேடினால்..வோடபோன் ஐடியா ரூ.365 திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். வோடபோன் ஐடியாவின் ரூ.365 திட்டம் ஆனது, இந்த பிரிவில் (சூப்பர் ஹீரோ பிரிவில்) ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் மலிவான திட்டமாகும். இது அன் லிமிடெட் வாய்ஸ் கால்கள், டெய்லி 2 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் ஆகியவற்றை வழங்கிறது.
கூடுதலாக இதன் கீழ் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, பாதி நாளுக்கான இலவச அன்லிமிடெட் டேட்டா (12AM முதல் 12PM வரை), வீக்கென்ட் டேட்டா ரோல்ஓவர் மற்றும் கூடுதல் கட்டணம் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் 2 ஜிபி வரை பேக்கப் டேட்டா ஆகிய நன்மைகளும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








