முடிச்சு விட்ட Vodafone.. ரூ.451 மினிமம்.. ஆனால், 50ஜிபி டேட்டா.. OTT சந்தா.. அன்லிமிடெட் கால்.. போனஸ் டேட்டா!
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களின் கட்டண உயர்வுக்கு பிறகு ரீசார்ஜ் செய்யவே பலருக்கு கடுப்பாக இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இதனால், புதுப்புது சலுகைகளை கொடுக்க அந்தந்த நிறுவனங்கள் திட்டமிட்டிருக்கின்றன. இப்போது, வோடபோன் ஐடியா நிறுவனமானது, ஜியோ நிறுவனத்தின் கஸ்டமர்களே மூக்கில் விரல் வைக்கும்படி ஒரு சம்பவத்தை செய்திருக்கிறது. போனஸ் டேட்டா சலுகையை வாரி வழங்கி இருக்கிறது. இந்த புதிய சலுகை எந்த திட்டத்தில் கிடைக்கிறது. அந்த திட்டத்தின் விவரங்கள் எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.
இந்த புதிய சலுகையானது, ரூ.451 ஆரம்ப விலையில் கிடைக்கும் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் சலுகைகளே கஸ்டமர்கள் மிரளும்படி இருக்கும். இப்போது, 50 ஜிபி போனஸ் டேட்டா வேறு கொடுக்கப்படுவதால், இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. முதலில் இந்த திட்டத்தின் சலுகைகளை பார்க்கலாம்.

வோடபோன் ஐடியா ரூ 451 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 451 Plan Details): இந்த வோடபோன் ஐடியா போஸ்ட்பெய்ட் திட்டத்தில் (Vodafone Idea Postpaid Plan) அதிகப்படியான டேட்டா சலுகை மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் பல்வேறு ஆப்ஷன்களுடன் முன்னணி ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது.
ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), நேஷனல் ரோமிங் (National Roaming) வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. டேட்டா சலுகையை பார்க்கையில் 200 ஜிபிக்கான ரோலோவர் டேட்டா மற்றும் 50 ஜிபி மொத்த டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இதுபோக கூடுதல் டேட்டா சலுகையும் கிடைக்கிறது.
அதாவது, நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டா சலுகையும் இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்துக்கு கிடைக்கிறது. இதற்கும் திட்டத்தின் டேட்டாவுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. இதுபோக 3000 எஸ்எம்எஸ் சலுகைகளை வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.

இந்த முக்கிய சலுகைகள் போக விஐ கேம்ஸ் (Vi Games) சலுகை கிடைக்கிறது. இந்த சலுகையை விஐ ஆப் (Vi App) மூலம் பெற்று கொள்ளலாம். ஓடிடி மற்றும் இதர சலுகைகளை பார்க்கையில் ஆப்ஷன் முறையில் வழங்கப்படுகிறது. அதாவது, முன்னணி ஓடிடி ஆப்கள் மற்றும் ஈஸ்மைடிரிப், நார்டன் செக்யூரிட்டி உள்ளிட்ட சலுகைகள் ஆப்ஷனில் வரும்.
இதில் ஏதாவது ஒன்றை வோடபோன் ஐடியா கஸ்டமர்களே தேர்ந்தெடுத்து பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஆப்ஷனில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) மொபைல் சந்தா ஒரு வருடத்துக்கு கிடைக்கிறது. அதேபோல சோனிலிவ் (SonyLIV), சன்நெக்ஸ்ட் (SunNXT) ஆகிய ஓடிடி தளங்களில் சந்தாவும் ஒரு வருடத்துக்கு கிடைக்கிறது.
இதுபோக ஈஸ்மைடிரிப் (EaseMyTrip) சலுகை மூலம் 1 வருடத்துக்கான அக்சஸ் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் மாதத்துக்கு ரூ 750 மதிப்பில் ரிட்டர்ன் பிளைட் டிக்கெட்டுகளில் சலுகையை பெற்று கொள்ளலாம். அதேபோல 1 வருடத்துக்கான நார்டன் (Norton) மொபைல் செக்யூரிட்டி கவர் வழங்கப்படுகிறது.
இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்துக்கு மாதாந்திர பில் கணக்கிடப்படும். மேற்கூறிய மொத்த சலுகைகளும் போக இப்போது 50 ஜிபிக்கான போனஸ் டேட்டா சலுகையை வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்குகிறது. இந்த சலுகை குறித்த நோட்டிபிகேஷன்களை கஸ்டமர்களுக்கு அனுப்பி வருகிறது. இதன்படி சலுகைகள் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








