Home
News

Vodafone Idea செம்ம போடு.. அடுத்த 28 நாட்களுக்கு வாய்ஸ், டேட்டா, ஓடிடி சந்தா.. 4ஜி டேட்டாவுக்கும் லிமிட் இல்ல!

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களில் 5ஜி டேட்டா மட்டுமே அன்லிமிடெட் சலுகையில் கிடைக்கிறது. 4ஜி டேட்டாவுக்கு தினசரி லிமிட் இருக்கிறது. ஆனால், வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் இந்த திட்டத்தில் லிமிட் கிடையாது.

வோடபோன் ஐடியா ரூ.449 திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 4ஜி டேட்டாவும் (Unlimited 4G Data) கிடைக்கிறது. இதுபோக 17 ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்பட்டு இருக்கிறது. டேட்டா மற்றும் ஓடிடி சலுகைகளுக்கு துளியும் குறையில்லாத இந்த திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

Vodafone Idea செம்ம போடு.. 28 நாட்களுக்கு வாய்ஸ், டேட்டா, ஓடிடி!

வோடபோன் ஐடியா ரூ.449 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 449 Plan Details): இந்த வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். வோடபோன் ஐடியா 5ஜி சேவைகள் கிடைக்கும் பகுதிகளுக்கு மட்டும் பொருந்தும்.

இதுபோக அன்லிமிடெட் 4ஜி டேட்டாவை இந்த திட்டம் கொடுக்கிறது. இது வோடபோன் ஐடியா சேவை கிடைக்கும் ஒட்டுமொத்த பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கும் பொருந்தும். எந்த லிமிட்டும் இல்லாமல், டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) கொடுக்கும்.

நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த திட்டத்தில் அனுப்பி கொள்ளலாம். அன்லிமிடெட் 5ஜி மற்றும் 4ஜி டேட்டா கிடைப்பதால், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர், அன்லிமிடெட் நைட் டேட்டா மற்றும் டேட்டா டிலைட்ஸ் போன்ற சலுகைகளை இந்த திட்டம் கொடுக்கவில்லை. இப்போது, இந்த வோடபோன் ஐடியா ரூ.449 திட்டத்தின் ஓடிடி சலுகைகளுக்கு வருவோம்.

இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கொடுக்கப்படுகிறது. இதையும் 28 நாட்களுக்கு கஸ்டமர்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், விஐ மூவிஸ் & டிவி ஆப் (Vi Movies & TV App) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் 19 ஓடிடி ஆப்கள் கிடைக்கும். ஆகவே, ஒரே ஆப் வழியாக 19 ஓடிடி ஆப்களை அணுகலாம்.

இதில் சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஃபேன்கோட் (FanCode) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. இதே சலுகைகளை கம்மியான விலைக்கு பெற வேண்டுமானால், ரூ.399 திட்டத்துக்கு செல்லலாம். இதில் விஐ மூவிஸ் & டிவி சந்தா மட்டும் கிடைக்காது. மற்ற சலுகைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.

வோடபோன் ஐடியா ரூ.399 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 399 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். முந்தைய திட்டத்தை போல அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 4ஜி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம்.

மேலும், ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை 28 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இதிலும், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர், அன்லிமிடெட் நைட் டேட்டா மற்றும் டேட்டா டிலைட்ஸ் சலுகைகள் கிடைக்காது. அதேபோல முந்தைய திட்டத்தில் கிடைத்த விஐ மூவிஸ் & டிவி ஆப் சந்தா கிடைக்காது. இதனாலேயே விலை குறைவாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 449 Plan With Unlimited Calls 28 Days Validity 19 OTT Apps Check Pack Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X