Home
News

அதிரடி காட்டிய Vodafone Idea.. இந்த 2 திட்டங்கள் போதும்.. தினமும் 3ஜிபி டேட்டா.. 15 OTT.. வாய்ஸ் கால்கள்!

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது வோடபோன் ஐடியா நிறுவனம். குறிப்பாக வோடபோன் ஐடியா (vodafone idea) நிறுவனம் சில திட்டங்களில் இரவு நேர இலவச டேட்டா நன்மையை வழங்குகிறது. இதுபோன்ற நன்மையை ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் கூட வழங்குவதில்லை. எனவே தான் வோடபோன் ஐடியா கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

அதேபோல் வோடபோன் ஐடியா பட்ஜெட் விலையில் அதிக டேட்டா மற்றும் 15 ஓடிடி நன்மைகளை வழங்கும் இரண்டு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த இரண்டு திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அதிரடி காட்டிய Vodafone Idea.. இந்த 2 திட்டங்கள் போதும்.. 15 OTT..

வோடபோன் ஐடியா ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் (vodafone idea rs 449 plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் வோடபோன ஐடியாவின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), பிளேஃபிளிக்ஸ், மனோரமா உட்பட 15 ஓடிடி ஆப்ஸ்களின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.

மேலும்அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) சலுகை வழங்குகிறது இந்த வோடபோன் ஐடியா ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் 64கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும்.

அதேபோல் இதில் பிஞ்ச் ஆல் நைட் (Binge All Night) டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த சலுகையில் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்த முடியும். இதற்கு கூடுதல் கட்டணம் கிடையாது. இதுதவிர வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் மற்றும் டேட்டா டிலைட்ஸ் சலுகைகள் வோடபோன் ஐடியா ரூ.449 திட்டத்தில் கிடைக்கிறது.

வோடபோன் ஐடியா ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம் (vodafone idea rs 979 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் வோடபோன ஐடியாவின் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டமும் சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), பிளேஃபிளிக்ஸ், மனோரமா உட்பட 15 ஓடிடி ஆப்ஸ்களின் அணுகலை வழங்குகிறது.

இதுதவிர அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) சலுகை வழங்குகிறது இந்த வோடபோன் ஐடியா ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் 64கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும்.

அதிரடி காட்டிய Vodafone Idea.. இந்த 2 திட்டங்கள் போதும்.. 15 OTT..

மேலும் இதில் பிஞ்ச் ஆல் நைட் (Binge All Night) டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த சலுகையில் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்த முடியும். இதற்கு கூடுதல் கட்டணம் கிடையாது. இதுதவிர வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் மற்றும் டேட்டா டிலைட்ஸ் சலுகைகள் வோடபோன் ஐடியா ரூ.979 திட்டத்தில் கிடைக்கிறது.

குறிப்பாக வோடபோன் ஐடிய நிறுவனத்தின் ரூ.449 மற்றும் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டங்கள் அதிக டேட்டா மற்றும் அதிக ஓடிடி நன்மைகளை வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். மேலும் வோடபோன் ஐடியா நிறுவனம் விரைவில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 449 and Rs 979 plans offer 15 OTT access and unlimited offers: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X