Home
News

அறக்க பறக்கும் ரீசார்ஜ்.. ரூ.409-க்கு வோடபோன் ஐடியா இறக்கிருச்சு.. 2.5 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்!

நாள்தோறும் அதிகப்படியான டேட்டாவும், கூடவே பக்காவான ஓடிடி சந்தாவும் கேட்கும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்களுக்கு வோடபோன் ஐடியா ரூ 409 திட்டம் (Vodafone Idea Rs 409 Plan) மற்றும் வோடபோன் ஐடியா ரூ 1559 திட்டம் (Vodafone Idea Rs 1559 Plan) பக்காவான தேர்வாக இருக்கும். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் ஆகிய ஆப்களின் சந்தா மட்டுமல்லாமல், நாள்தோறும் 2.5 ஜிபி டேட்டாவை இந்த திட்டங்கள் கொடுக்கின்றன.

இதுபோக வார நாட்களில் பயன்படுத்தாமல் இருக்கும் டேட்டாவை வார இறுதி நாட்களில் பயன்படுத்தி கொள்ளும் சலுகை, நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டா சலுகை மற்றும் மாதத்துக்கு ஒரு முறை 2 ஜிபி பேக்கப் டேட்டா போன்ற சலுகையையும் கொடுக்கிறது. இதுபோக அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகையை பேக் செய்துள்ளது.

அறக்க பறக்கும் ரீசார்ஜ்.. ரூ.409-க்கு வோடபோன் ஐடியா இறக்கிருச்சு!

வோடபோன் ஐடியா ரூ 409 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 409 Plan Details): இந்த வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டத்தில் (Vodafone Idea Prepaid Plan) தினசரி டேட்டா (Daily Data), வாய்ஸ் கால்கள் (Voice Calls) மற்றும் ஓடிடி (OTT) சலுகைகளுக்கு எந்தவித குறையும் இருக்காது. ஏனென்றால், நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா சலுகையை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

அதேபோல நாள்தோறும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming Calls) செய்து கொள்ள முடியும். இதுபோக 100 எஸ்எம்எஸ் மற்றும் விஐ ஹீரோ அன்லிமிடெட் (Vi Hero Unlimited) சலுகை கிடைக்கின்றன. இந்த விஐ சலுகை மூலம் வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) கிடைக்கிறது.

அதேபோல பிஞ்ச் ஆல் நைட் டேட்டா (Binge All Night) மற்றும் டேட்டா டிலைட்ஸ் (Data Delights) சலுகைகளும் வருகிறது. ஆகவே, வார இறுதி நாட்கள் டேட்டா, அன்லிமிடெட் நைட் டேட்டா மற்றும் மாதத்துக்கு 2 ஜிபி பேக்கப் டேட்டா சலுகைகள் கிடைக்கிறது. இந்த எல்லா சலுகைகளும் போகவே ஓடிடி சலுகையை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது.

ஆகவே, டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சந்தாவை இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம். இந்த ஓடிடி சந்தாவை 3 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்த முடியும். ஆனால், இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. அடுத்ததாக, 2.5 ஜிபி டேட்டாவுடன் நெட்ஃபிளிக்ஸ் சந்தா கொடுக்கும் திட்டத்தை பார்க்கலாம்.

வோடபோன் ஐடியா ரூ 1559 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1559 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் முந்தைய திட்டத்தில் பார்த்த அனைத்து சலுகைகளும் வருகின்றன. ஆனால், வேலிட்டி மற்றும் ஓடிடி சந்தா மட்டும் மாறுபடுகிறது. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது.

மொத்தமாக 84 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், 210 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ள முடியும். ஆகவே, கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு டேட்டா பற்றிய கவலையே இந்த திட்டத்தில் இருக்கிறது. அதேபோல வாய்ஸ் கால்களுக்கும் கவலை இருக்காது. ஏனென்றால், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்களை இந்த திட்டத்தில் செய்து கொள்ள முடியும்.

மேலும், விஐ ஹீரோ அன்லிமிடெட் சலுகையின் கீழ் வீக்கெண்ட் டேட்டா ரோலோவர், பிஞ்ச் ஆல் நைட் டேட்டா மற்றும் டேட்டா டிலைட்ஸ் ஆகியவை பயன்படுத்த கிடைக்கின்றன. இந்த திட்டத்தின் ஓடிடி சலுகையை பொறுத்தவரையில், நெட்பிளிக்ஸ் பேசிக் (Netflix Basic) சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த ஓடிடிக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 409 Plan With Unlimited Voice Calls 70GB Data Hotstar Mobile Subscription
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X