Airtel-ஐ தொடர்ந்து டேட்டா நன்மையை டபுள் ஆக்கிய Vodafone Idea.. எந்த திட்டத்தில்?
2026 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வி ஆகிய நிறுவனங்கள் 20% வரை ரீசார்ஜ் விலை உயர்வை அறிவிக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில்.. வோடபோன் ஐடியா நிறுவனமானது பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நடவடிக்கை ஒன்றை அப்படியே காப்பி அடித்துள்ளது.
எந்த திட்டத்தில்? வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் ஆனது ரூ.3,999 மதிப்புள்ள போஸ்ட்பெய்டு இன்டர்நேஷனல் ரோமிங் பேக்கின் (Rs.3,999 postpaid International Roaming Pack) நன்மைகளை திருத்தி உள்ளது. இந்த திருத்தத்தின் கீழ் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கான டேட்டா நன்மை கணிசமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ஏர்டெல்லை பின்பற்றி வி: கனடா, ஜப்பான், அஜர்பைஜான், ஜோர்டான், சாம்பியா மற்றும் பிற நாடுகளுக்கு பயணிக்கும் வி பயனர்களால் ஆக்டிவேட் செய்யப்படும் ஸ்டாண்டர்ட் ஐஆர் பேக்கிற்கு இந்த திருத்தப்பட்ட நன்மைகள் பொருந்தும். வி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை - ஏர்டெல் நிறுவனம் அதன் ரூ.3,999 போஸ்ட்பெய்டு ஐஆர் பேக்கில் செய்த மாற்றத்துடன் (அதிகரித்த டேட்டா நன்மைக) ஒற்றுப்போகிறது.
வி ரூ.3,999-ன் திருத்தப்பட்ட நன்மைகள்: இப்போது ரூ.3,999 போஸ்ட்பெய்டு ஐஆர் பேக் ஆனது 30 ஜிபி டேட்டாவை 30 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்குகிறது. இது முன்னதாக கிடைத்த 12 ஜிபி டேட்டாவை விட இரட்டிப்பாகும். இந்த பேக்கில் 1,500 நிமிடங்களுக்கான வெளிச்செல்லும் உள்ளூர் அழைப்புகள் மற்றும் இந்தியாவிற்கான அழைப்பு நன்மைகளும் அடங்கும், அதே நேரத்தில் தகுதியான இடங்களுக்கு உள்வரும் அழைப்புகளும் இலவசமாக கிடைக்கும்
கூடுதலாக, சந்தாதாரர்கள் இந்த பேக்கின் ஒரு பகுதியாக 100 வெளிச்செல்லும் எஸ்எம்எஸ்களையும் பெறுகிறார்கள். உள்ளடக்கப்பட்ட நாடுகளுக்கு வெளியே உள்ள இடங்களுக்கு செய்யப்படும் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ.35 கட்டணம் வசூலிக்கப்படும். மேம்படுத்தப்பட்ட சலுகைகள் வி-யின் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டு வகைகளின் கீழ் வகைப்படுத்தப்பட்ட இடங்களுக்கு பொருந்தும்.
குறிப்பிடத்தக்க வகையில், வோடபோன் ஐடியா அதன் சர்வதேச ரோமிங் சலுகைகளையும் நெறிப்படுத்தியுள்ளது. முன்னதாக, ரூ.3,999 பேக் ஆனது செட் 2 மற்றும் செட் 3 நாடுகளுக்கு வேறுபட்ட சலுகைகளை வழங்கியது, சேருமிடத்தைப் பொறுத்து மாறுபடும் டேட்டா மற்றும் வாய்ஸ் நன்மைகளை வழங்கியது. ஆனால் இந்த சமீபத்திய திருத்தத்துடன், வி நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு ஒருங்கிணைந்த சலுகைகளைக் கொண்டுள்ளது; சிங்கிள், தரப்படுத்தப்பட்ட நன்மைகளை கொண்ட கட்டமைப்பை வழங்குகிறது.
சமீபத்தில் அறிமுகமான வி ஹேண்ட்செட் லாஸ் இன்சூரன்ஸ் கவரேஜ் (Handset loss insurance coverage) கொண்ட புதிய ப்ரீபெய்ட் டேட்டா பேக்குகள்: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டேட்டா பேக்குகள் ஆனது ஆதித்யா பிர்லா ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (ABHICL) உடன் இணைந்து வழங்கப்படும் ரூ.25,000 வரையிலான ஹேண்ட்செட் லாஸ் இன்சூரன்ஸ் கவரேஜுடன் டேட்டா அலவன்ஸையும் இணைக்கின்றன. முன்னரே குறிப்பிட்டபடி இந்த டேட்டா பேக்குகள் இந்தியா முழுவதும் கிடைக்கிறது மற்றும் வி ஆப், வலைத்தளம் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களிலும் ரீசார்ஜ் செய்யலாம்.
இந்த திட்டத்தின் கீழ் வி நிறுவனம் மூன்று வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிக விலை கொண்ட பேக்கின் விலை ரூ.251 மற்றும் இது 30 நாட்கள் செல்லுபடியாகும் 10 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதே நேரத்தில் ஹேண்ட்செட் இன்சூரன்ஸ் கவர் ஆனது 365 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
இரண்டாவது பேக்கின் விலை ரூ.201 ஆகும். இது 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் 10 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஆனால் 180 நாட்கள் என்கிற குறுகிய ஹேண்ட்செட் இன்சூரன்ஸ் காலத்துடன் வருகிறது. பேஸிக் பேக்கின் விலை ரூ.61 ஆகும். இது 15 நாட்களுக்கு செல்லுபடியாகும் 2 ஜிபி டேட்டாவையும், 30 நாட்களுக்கான ஹேண்ட்செட் இன்சூரன்ஸ் கவரேஜையும் வழங்கும்


Click it and Unblock the Notifications








