Vodafone Idea ஒரே போடு.. இனி ரூ.398 க்கு லிமிட் இல்லா 5G, 4G டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்!
வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி மற்றும் அன்லிமிடெட் 4ஜி டேட்டாவை கொடுக்கும் திட்டங்களில் மலிவான விலைக்கு கிடைக்கும் இந்த திட்டமானது அதிகளவில் ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. இந்த விஐ நான் ஸ்டாப் ஹீரோ திட்டத்தின் (Vi Non Stop Hero Plan) முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
விஐ நான் ஸ்டாப் ஹீரோ திட்டங்கள் மொத்தமாக 5 மட்டுமே கிடைக்கின்றன. இதில் ஆரம்ப விலை திட்டமாக வோடபோன் ஐடியா ரூ.398 திட்டம் இருக்கிறது. ஆகவே, அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 4ஜி டேட்டா வேண்டுமானால், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகளும் இதற்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

வோடபோன் ஐடியா ரூ. 398 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 398 Plan Details): இந்த விஐ நான் ஸ்டாப் ஹீரோ திட்டத்துக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) மற்றும் அன்லிமிடெட் 4ஜி டேட்டா (Unlimited 4G Data) சலுகைகள் கொடுக்கப்படும். ஆனால், மாதத்துக்கு 300 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம்.
ஆகவே, இந்த 300 ஜிபி லிமிட்டுக்கு மேல் போஸ்ட் டேட்டா சலுகை மட்டுமே கொடுக்கப்படும். இந்த டேட்டா சலுகையை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் (Unlimited Local, STD, Roaming Voice Calls) கொடுக்கப்பட்டு உள்ளது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையையும் இந்த விஐ நான் ஸ்டாப் ஹீரோ திட்டம் கொடுத்து உள்ளது.
இதேபோல அன்லிமிடெட் டேட்டா சலுகையுடன் ஓடிடி சந்தா வேண்டுமானால், இதற்கு அடுத்த இருக்கும் நான் ஸ்டாப் ஹீரோ திட்டத்தை பெற்று கொள்ளலாம். இதில் வேலிடிட்டி, டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களின் சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கும். ஆனால், கூடுதலாக ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கும். பிரீமியம் ஓடிடி மற்றும் ஓடிடி பண்டில் சந்தாவை பெறலாம்.
வோடபோன் ஐடியா ரூ. 449 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 449 Plan Details): 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்திலும் அன்லிமிடெட் 4ஜி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகை மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களின் சலுகை கிடைக்கிறது.
இந்த சலுகைகள் போக விஐ மூவிஸ் & டிவி ஆப் (Vi Movies & TV App) கிடைக்கிறது. இதில் 19 ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படும். ஆகவே, சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) மற்றும் ஃபேன்கோட் (FanCode) உள்ளிட்ட ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கிறது. மேலும், ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவும் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்துக்கும் மாதத்துக்கு 300 ஜிபி டேட்டா கேப் பொருந்தும். அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே, 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படும். இல்லையென்றால், 4ஜி டேட்டா அன்லிமிடெட் சலுகையில் கொடுக்கப்படும். இதில் ஓடிடி மற்றும் டேட்டா தேவைக்கு ஏற்ப ஆப்ஷனை கஸ்டமர்கள் தேர்ந்தெடுக்கலாம்.


Click it and Unblock the Notifications