இறங்கி அடிச்ச Vodafone Idea.. இனிமே ரூ.380 போதும்.. தமிழ்நாட்டுல வாய்ஸ் மட்டுமில்ல.. டேட்டாவும் அன்லிமிடெட்!
வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) போலவே அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) சலுகையும் சேர்க்கப்பட்டுள்ளது. இனிமேல் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா, 2 ஜிபி டேட்டா என்னும் கணக்கே இல்லாமல், நாள் முழுவதும் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களும் (Prepaid Plan) தமிழ்நாட்டு கஸ்டமர்களுக்கு பிரத்யேகமாக கிடைக்கின்றன. 28 நாட்கள், 56 நாட்கள் மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டியில் வருகின்றன.
வோடபோன் ஐடியா நான்ஸ்டாப் ஹீரோ (Vodafone Idea Nonstop Hero) திட்டங்களில் கீழ் இவை ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. மூன்று திட்டங்களிலும் நாள் முழுவதும் அன்லிமிடெட் டேட்டா சலுகை கிடைக்கும். ஆகவே, திட்டத்தின் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். இப்போது, ஒவ்வொரு திட்டமாக பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ 380 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 380 Plan Details): இந்த நான்ஸ்டாப் ஹீரோ திட்டத்தில் 28 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த 28 நாட்கள் முழுவதும் அன்லிமிட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். அதேபோலத்தான் டேட்டாவும் கிடைக்கிறது.
அதாவது, 28 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். தினசரிக்கு இவ்வளவு டேட்டா லிமிட் என்பது கிடையாது. அன்லிமிடெட் சலுகையில் பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், எஸ்எம்எஸ்கள் மட்டும் வழக்கம்போல நாளொன்றுக்கு 100 என்னும் கணக்கில் கொடுக்கப்படுகிறது. இதைவிட அதிக வேலிடிட்டிக்கு அடுத்த திட்டம் சரியாக இருக்கும்.
வோடபோன் ஐடியா ரூ 680 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 680 Plan Details): இந்த நான்ஸ்டாப் ஹீரோ திட்டத்துக்கு 56 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெ் டேட்டா சலுகை கிடைக்கிறது. அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் உள்பட அன்லிமிடெட் லோக்கல் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது.
மேலும், அன்லிமிடெட் எஸ்டிடி மற்றும் நேஷனல் ரோமிங் கால்களையும் இந்த திட்டம் கொடுக்கிறது. தினசரி டேட்டாவுக்கு லிமிட் இல்லாததால், இந்த திட்டத்துக்கு போஸ்ட் டேட்டா (Post Data) சலுகை கொடுக்கப்படவில்லை. 56 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் டேட்டா சலுகை மட்டுமே கிடைக்கிறது. இறுதியாக கிடைக்கும் மூன்றாவது திட்டத்தை பார்ப்போம்.
வோடபோன் ஐடியா ரூ 1020 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1020 Plan Details): வோடபோன் ஐடியா நான்ஸ்டாப் ஹீரோ திட்டத்தில் அதிக விலைக்கு இந்த திட்டம் கிடைக்கிறது. இதற்கு மேல் வேறு நான்ஸ்டாப் ஹீரோ திட்டங்கள் கிடையாது. ஆகவே, அதிக டேட்டா சலுகை கொண்ட திட்டம் வேண்டுமானால், இதை மட்டுமே ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்.
ஏனென்றால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. மேலும், முந்தைய திட்டங்களில் பார்த்தபடி நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களும் கிடைக்கின்றன. இதில் உங்களுக்கான திட்டத்தை நீங்களே முடிவு செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications








