Home
News

வெளுத்து விட்ட வோடபோன்.. மாதாந்திரம் ரூ.316 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு பிறகு மாதாந்திரம் ரூ.316 மதிப்பில் 365 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் நைட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், ஒரு வருடத்துக்கான அமேசான் பிரைம் வீடியோ சந்தாவையும் ஒரு ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. இதில் வீக்கெண்ட் டேட்டா, டேட்டா டிலைட்ஸ் உள்ளிட்ட சலுகைகளும் வருகின்றன. இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் திட்டங்களில் மாற்றங்களை செய்துள்ளன. முன்பு கிடைத்த திட்டங்கள் கூடுதல் விலைக்கு வருகின்றன. இதனால், வருடாந்திர திட்டங்களை ரீசார்ஜ் செய்தால் மட்டுமே மாதத்துக்கு ஏற்படும் செலவை குறையும் நிலை ஏற்பட்டது. ஆகவே, வருடாந்திர திட்டங்களுக்கு மவுசு ஏறி இருக்கிறது.

வெளுத்து விட்ட வோடபோன்.. மாதாந்திரம் ரூ.316 போதும்.. 365 நாட்கள் சேவை!

ஆகவே, ரீசார்ஜ் செய்யும்போது, தினசரி டேட்டா, அன்லிமிடெட் கால்கள், எஸ்எம்எஸ், கூடுதல் டேட்டா சலுகைகள் மட்டுமல்லாமல், ஓடிடி சந்தா கொண்ட திட்டங்களை தேர்வு செய்து கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து வருகின்றனர். இப்படி அனைத்து சலுகைகளையும் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ 3799 திட்டம் கொடுக்கிறது. அமேசான் பிரைம் வீடியோ சந்தாவும் வருகிறது.

வோடபோன் ஐடியா ரூ 3799 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 3799 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ 3199 ஆக இருந்தது. இப்போது ரூ 600 விலை அதிகரிப்புடன் கிடைக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் குறையில்லாமல் அனைத்து சலுகைகளும் கிடைக்கின்றன.

ஆகவே, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) இந்த 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தில் பெற்று கொள்ளலாம். தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். டேட்டாவை பார்க்கையில் 2 ஜிபி டேட்டா நாளொன்றுக்கு கிடைக்கிறது.

ஆகவே, 365 நாட்களுக்கு 730 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இதுபோக நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டாவை பிஞ்ச் ஆல் நைட் (Binge All Night) சலுகை மூலம் பெற்று கொள்ளலாம். அதேபோல வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) மூலம் பயன்படுத்தாத டேட்டாவை வீக்கெண்ட்டில் பயன்படுத்தலாம்.

மேலும், டேட்டா டிலைட்ஸ் (Data Delights) சலுகை மூலம் மாதாந்திரம் 2 ஜிபி டேட்டாவை கூடுதலாக பெற்று கொள்ளலாம். தினசரி டேட்டா 2 ஜிபிக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆகவே, வருடம் முழுவதும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டாவுக்கு துளியும் குறை இருக்காது. இந்த முக்கிய சலுகைகளெல்லாம் போக ஓடிடி சந்தா கிடைக்கிறது.

ஆகவே, அமேசான் பிரைம் வீடியோ மொபைல் (Amazon Prime Video Mobile) சாந்தாவை இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம். இந்த சந்தாவுக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதைவிட மலிவான விலையில் அமேசான் பிரைம் வீடியோ சந்தா வேண்டுமானால், ரூ 996 விலையில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்துக்கு வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் செல்லலாம்.

இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 2 ஜிபி தினசரி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. முந்தைய திட்டத்தில் பார்த்த கூடுதல் டேட்டா சலுகைகளை பெற்று கொள்ளலாம். அதேபோல அமேசான் பிரைம் வீடியோ லைட் சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த ஓடிடி சந்தாவில் 2 டிவைஸ் கனெக்டிவிட்டி கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 3799 Plan With Unlimited Calls, 2GB Data, 365 Days Validity Here One Year Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X