Home
News

Vi-க்கு கும்பிடு.. மாதம் ரூ.316 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 2ஜிபி டேட்டா.. ஓடிடி சந்தா!

வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள், அமேசான் பிரைம் வீடியோ லைட் சந்தா போன்ற சலுகைகளை கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம். டேட்டா டிலைட்ஸ், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் போன்ற கூடுதல் டேட்டா சலுகைகளும் இதில் வருடம் முழுவதும் கிடைக்கின்றன. இதற்கான மாத செலவு ரூ.316 ஆக மட்டுமே இருக்கிறது.

வோடபோன் ஐடியா ரூ 3799 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கே இந்த சலுகைகள் கிடைக்கிறது. இதில் 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கிடைப்பதால், ஒரு மாதத்துக்கு ஆகும் செலவை கணக்கிட்டால், ரூ.316 தேவைப்படுகிறது. இதில் அதிகப்படியான டேட்டா மற்றும் ஓடிடி சலுகைகள் கிடைக்கின்றன. என்னென்ன சலுகைகள் என்பதை விரிவாக பார்ப்போம்.

Vi-க்கு கும்பிடு.. மாதம் ரூ.316 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி!

வோடபோன் ஐடியா ரூ 3799 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 3799 Plan Details): இந்த விஐ வருடாந்திர திட்டத்தை (Vi Yearly Plan) ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும், 2 ஜிபி டேட்டாவையும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இதில் 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்கிறது. ஆனால், 100 எஸ்எம்எஸ்களுக்கு பிறகு கட்டணம் இருக்கும். இந்த டேட்டா சலுகைகளை வருடம் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக விஐ கஸ்டமர்களுக்கு பிரத்யேகமாக கிடைக்கும் வீக்கெண்ட் டேட்டா ரோலேவர் (Weekend Data Rollover) சலுகை வருகிறது.

அதேபோல டேட்டா டிலைட்ஸ் (Data Delights) சலுகையும், பிஞ்ச் ஆல் நைட் டேட்டா (Binge All Night Data) சலுகையும் வாரி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த வோடபோன் ஐடியா ரூ 3799 திட்டத்தில் டேட்டாவுக்கு வருடம் முழுவதும் குறை இருக்காது. இந்த டேட்டா சலுகைக்கு ஏற்ப பிரீமியம் ஓடிடி சந்தாவும் வருடம் முழுவதும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆகவே, அமேசான் பிரைம் வீடியோ லைட் (Amazon Prime Lite) சந்தாவை 365 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் கிடைக்கிறது. ஆனால், அது 5ஜி கவரேஜ் ஏரியாக்களில் மட்டுமே கிடைக்கும். அதாவது, டெல்லி என்சிஆர், பெங்களூரூ போன்ற சேவை தொடங்கப்பட்ட பகுதிகளில் கிடைக்கிறது.

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு, உங்களது பகுதியில் அன்லிமிடெட் 5ஜி சேவை தொடங்கப்பட்டாலும், உங்களுக்கு இந்த சலுகை கிடைக்கும். இந்த அமேசான் பிரைம் வீடியோ சந்தாவானது, இதைவிட மலிவான விலைக்கு வேண்டுமானால், 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்துக்கு மட்டுமே செல்ல முடியும். இதன் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

வோடபோன் ஐடியா ரூ 996 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 996 Plan Details): இந்த வோடபோன் ஐடியா திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், அமேசான் பிரைம் வீடியோ லைட் சந்தாவானது 90 நாட்களுக்கு கொடுக்கப்படுகிறது. மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஆகவே, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள் வருகிறது.

மேலும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா, பிஞ்ச் ஆல் நைட் டேட்டா, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் மற்றும் டேட்டா டிலைட்ஸ் சலுகைகள் வருகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகைகள் 84 நாட்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த திட்டங்களில் ஏதாவது ஒன்றை ரீசார்ஜ் செய்தால் மட்டுமே உங்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ சந்தா கொடுக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 3799 Plan With 365 Days Validity Unlimited Voice Calls Amazon Prime Lite OTT
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X