ரீசார்ஜ் பிச்சிக்கும்.. 56 நாட்கள் வேலிடிட்டி.. 12 மணி நேர FREE டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 3 ஜிபி டேட்டா!
வோடபோன் ஐடியா (Vodafone Idea) சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு 56 நாட்கள் வேலிடிட்டியில் பட்டையை கிளப்பும்படியான ப்ரீபெய்ட் திட்டங்கள் (Prepaid Plan) கிடைக்கின்றன. இதில் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தில் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கிறது. இதுபோக வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சலுகைகள் கிடைக்கின்றன. இந்த திட்டங்கள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
வோடபோன் ஐடியா ரூ 369 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs 369 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் லம்ப்-சம் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் லம்ப்-சம் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. ஆகவே, வேலிடிட்டி அதிகமாக எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருத்தமாக இருக்கும். டேட்டாவுக்கு இருக்காது. ஆகவே, இதில் 4 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கிறது.

அதேபோல 600 எஸ்எம்எஸ்கள் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. இந்த சலுகைகள் போக வேறு எந்தவித சலுகையும் இந்த திட்டத்தில் கிடையாது. தினசரிக்கு டேட்டாவுக்கு பின்வரும் திட்டம் ஆப்ஷனாகும்.
வோடபோன் ஐடியா ரூ 579 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs 579 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளுடன் 56 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகையானது 56 நாட்களுக்கு கொடுக்கப்படும்.
எஸ்எம்எஸ் சலுகையும் முந்தைய திட்டத்தை போலல்லாமல் தினசரிக்கு 100 என்னும் கணக்கில் கிடைக்கிறது. வாய்ஸ் கால்கள் அன்லிமிடெட் சலுகையில் கிடைக்கிறது. இதுபோக விஐ ஹீரோ அன்லிமிடெட் (Vi Hero Unlimited) சலுகையின் கீழ் பிஞ்ச் ஆல் நைட் டேட்டா (Binge All Night), வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) மற்றும் டேட்டா டிலைட்ஸ் (Data Delights) வருகிறது.
வோடபோன் ஐடியா ரூ 649 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs 649 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் தினசரி டேட்டா வருகிறது. ஆனால், 2 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மட்டுமல்லாமல், நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. மேலும், முந்தைய திட்டத்தில் கிடைத்த சலுகையும் உள்ளது.
அதாவது, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் மற்றும் டேட்டா டிலைட்ஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. மற்ற சலுகைகளை பார்க்கையில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் சலுகையும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் கொடுக்கப்படுகிறது. 56 நாட்கள் வேலிடிட்டியில் மேற்கண்ட சலுகைகள் கொடுக்கப்படுகிறது. ஓடிடியுடன் அடுத்த திட்டம் உள்ளது.
வோடபோன் ஐடியா ரூ 795 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs 795 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 56 நாட்கள் வேலிடிட்டியில் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா, நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. இதுபோக விஐ மூவிஸ் & டிவி சலுகை 60 நாட்களுக்கு கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








