Home
News

இதுபோதுமே.. 30 நாட்கள் திட்டத்தில் ஓடிடி சந்தா.. 2ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் கால்ஸ்.. அறக்க பறக்கும் ரீசார்ஜ்!

வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் 30 மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 2 ப்ரீபெய்ட் திட்டங்களில் டேட்டா, வாய்ஸ் கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், சோனிலிவ் (SonyLIV) ஓடிடி தளத்தின் சந்தாவையும் வழங்குகிறது. இதுகுறித்த குறித்த விவரம் இதோ.

வோடபோன் ஐடியா ரூ 369 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 369 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா (Data), வாய்ஸ் கால்கள் (Voice Calls), எஸ்எம்எஸ் (SMS) மற்றும் ஓடிடி (OTT) சலுகைகள் மட்டுமல்லாமல், டேட்டா ரோலோவர், பின்ஞ் ஆல் நைட் போன்றவையும் வழங்கப்படுகிறது.

இதுபோதுமே! 30 நாட்கள் திட்டத்தில் ஓடிடி சந்தா! அறக்க பறக்கும் ரீசார்ஜ்

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கும். அதோடு விஐ ஹீரோ அன்லிமிடெட் ஆஃபரும் (Vi Hero Unlimited Offer) வழங்கப்படுகிறது. இந்த ஆஃபரின் கீழ் வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover), டேட்டா டிலைட்ஸ் (Data Delights) மற்றும் பின்ஞ் ஆல் நைட் (Binge All Night) சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

அதாவது, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் சலுகை மூலம் திங்கள் முதல் வெள்ளி வரையில் உங்களுக்கு ஒதுக்கப்படும் 2 ஜிபி டேட்டாவை முழுமையாக பயன்படுத்தவில்லை என்றால், அதை சனி மற்றும் ஞாயிறுகளில் கூடுதலாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல பின்ச் ஆல் நைட் சலுகை மூலம் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த டேட்டாவானது, உங்களது திட்டத்தின் டேட்டாவில் இருந்து கழிக்கப்படாது. மேலும் டோட்டா டிலைட்ஸ் சலுகை மூலம் பேக்கப் டேட்டாவாக மாதத்துக்கு 2 ஜிபி டேட்டா இலவசமாக கொடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல், விஐ மூவிஸ் & டிவி விஐபி (Vi Movies & TV VIP) சப்ஸ்கிரிப்ஷன் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

இவ்வளவு சலுகைகள் போக சோனிலிவ் (SonyLIV) ஓடிடி தளத்தை 30 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்களாகும். இதேபோல 90 நாட்கள் வேலிடிட்டி உடன் ரூ.903 மதிப்பில் மற்றொரு திட்டம் இருக்கிறது. இந்த திட்டம் குறித்து தெரிந்து கொள்வோம்.

வோடபோன் ஐடியா ரூ 903 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 903 Plan Details): இந்த திட்டத்துக்கு 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் நளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கும். அதேபோல அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த திட்டத்திலும் விஐ ஹீரோ அன்லிமிடெட் ஆஃபர்களான டேட்டா ரோலோவர், டேட்டா டிலைட்ஸ் மற்றும் பின்ஞ் ஆல் நைட் சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியும். அதேபோல விஐ மூவிஸ் & டிவி விஐபி சப்ஸ்கிரிப்ஷன் 90 நாட்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டத்தில் மற்றொரு பிரத்யேக சலுகையாக ஃபேர் யூசேஜ் பாலிசியின் (Fair Usage Policy) கீழ் 64 கேபிபிஎஸ் வேக அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது.

அதாவது, நீங்கள் தினசரி டேட்டாவை முற்றிலும் பயன்படுத்திய பின்பும், 64 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து இன்டர்நெட் சேவை கிடைக்கும் சலுகையை இந்த திட்டம் வழங்குகிறது. இந்த 90 நாட்களிலுக்கு சோனிலிவ் மொபைல் ஓடிடி தளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இதுபோன்ற சலுகைகள் 30 மற்றும் 90 நாட்களுக்கு வேண்டும் என்றால், இந்த திட்டங்களை தேர்வு செய்துகொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 369 Plan Comes With Unlimited Voice Calling, 100 SMS, 2GB Data 30 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X