அறக்க பறக்கும் ரீசார்ஜ்.. FREE டேட்டா.. ஆனால், 12AM - 12PM.. அன்லிமிடெட் வாய்ஸ்.. வெறும் 365 ரூபாய்க்கு வருது!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்கள் மட்டுமல்லாமல், பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் கஸ்டமர்கள்கூட மூக்கில் விரல் வைக்கும்படி அடிமட்ட விலை கொண்ட ப்ரீபெய்ட் திட்டதில் 12 மணி நேரத்துக்கு அன்லிமிடெட் டேட்டா மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் தினசரி டேட்டாவை வோடபோன் ஐடியா (Vodafone Idea) கொடுக்கிறது. இந்த புதிய வோடபோன் ஐடியா ரூ 365 ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வோடபோன் ஐடியா நிறுவனம், அன்லிமிடெட் நைட் டேட்டா (Unlimited Night Data) சலுகையை பிரத்யேகமாக கொடுக்கிறது. இந்த சலுகை முன்பு நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் மட்டுமே கிடைத்தது. ஆனால், இதை மதியம் 12 மணி வரையில் வோடபோன் ஐடியா அதிகரித்தது. ஆகவே, 12 மணி நேரத்துக்கு (பாதி நாள்) இலவச டேட்டா கொடுக்கப்படுகிறது.

இந்த சலுகையுடன் புதிய ப்ரீபெய்ட் திட்டம் இப்போது, களமிறங்கி இருக்கிறது. டேட்டாவுக்கு கொஞ்சமும் குறையில்லாத திட்டமாக இது இருக்கிறது. சொல்லப்போனால், நைட் டேட்டா மட்டுமல்லாமல், தினசரி டேட்டா (Daily Data), வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) மற்றும் டேட்டா டிலைட் (Data Delights) சலுகையும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
வோடபோன் ஐடியா ரூ 365 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 365 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 2 ஜிபி டேட்டா தினசரி கொடுக்கப்படும். இதை மதியம் 12 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரையில் பயன்படுத்தி கொள்ளலாம். அதற்கு பிறகு 12AM டூ 12PM டேட்டா சலுகை கொடுக்கப்படும். இந்த திட்டத்துக்கு போஸ்ட் டேட்டாவும் கிடைக்கிறது.
2 ஜிபி டேட்டாவை இலவச டேட்டா தொடங்கும் முன்பே பயன்படுத்திவிட்டால், 64 கேபிபிஎஸ் வேகத்தில் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டா சலுகைகளுக்கு பிறகும் ஏற்கனவே வோடபோன் ஐடியாவில் கிடைக்கும் வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் மற்றும் டேட்டா டிலைட் சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. இதற்கு அடுத்து என்னென்ன சலுகைகள் இருக்கின்றன.
டேட்டாவுக்கு அடுத்தப்படியாக வாய்ஸ் கால்களுக்கும் பஞ்சமில்லாதபடி அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் (Roming Voice Calls) சலுகைகள் கொடுக்கப்படுகிறது. எஸ்எம்எஸ்களை பொறுத்தவரையில் தினசரிக்கு 100 என்னும் லிமிட்டில் அனுப்பி கொள்ள கிடைக்கிறது. இந்த சலுகைகள் 28 நாட்கள் வேலிடிட்டியில் கொடுக்கப்படும்.
ஏர்டெல் மற்றும் ஜியோவை போல 5ஜி டேட்டா கிடைக்கவில்லை என்றாலும்கூட அதற்கு நிகரான டேட்டாவை இலவசமாக வோடபோன் கொடுக்கிறது. அதோபோல பிஎஸ்என்எல் நிறுவனத்தைவிட வேகமான டேட்டாவை கொடுக்கிறது. வோடபோன் ஐடியா அதனுடைய திட்டங்களில் நன்றாகவே இருக்கிறது. இதேபோல 24 மணி நேர டேட்டாவும் இலவசமாக வருகிறது.
இந்த திட்டங்களும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதை பெறும் கஸ்டமர்கள் 24 மணி நேரமும் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்த முடியும். 2 ஜிபி அல்லது 3 ஜிபி என்ற தினசரி லிமிட் இந்த திட்டங்களில் கிடையாது. வாய்ஸ் கால்களை போல எப்போது வேண்டுமோ அப்போது பயன்படுத்த முடியும். டேட்டா மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ், ஓடிடி வருகிறது.
ஆனால், இந்த 24 மணி நேர இலவச டேட்டா திட்டங்கள் தமிழ்நாட்டின் கஸ்டமர்களுக்கு கிடைக்கவில்லை. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா போன்ற குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், வரும் மாதங்களில் தமிழ்நாட்டிலும் கிடைக்க வாய்ப்புள்ளதால், வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் ஆவலாக காத்து கொண்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








