Home
News

Vi ஒரே போடு.. இனி ரூ.365 போதும்.. உடனே இதை ரீசார்ஜ் பண்ணிடுங்க.. அன்லிமிடெட் வாய்ஸ், டேட்டா, எஸ்எம்எஸ்!

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்கள் மலிவான விலைக்கு அன்லிமிடெட் வாய்ஸ், தினசரிக்கு டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், 12 மணி நேரத்துக்கு முற்றிலும் இலவச டேட்டா வேண்டுமானால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.

வோடபோன் ஐடியா ரூ. 365 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 365 Plan Details): 28 நாட்கள் வேலிடிட்டியானது இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கொடுக்கப்படுகிறது. இந்த வேலிடிட்டி முழுவதும் தினமும் 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். மேலும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா, இந்த 2 ஜிபி டேட்டா முடிந்த பிறகு கிடைக்கும். இந்த டேட்டா சலுகைகள் வழக்கமாக கிடைக்கின்றன.

Vi ஒரே போடு.. இனி ரூ.365 போதும்.. உடனே இதை ரீசார்ஜ் பண்ணிடுங்க!

ஆனால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதலாக பல்வேறு டேட்டா சலுகைகள் இருக்கின்றன. அதாவது, இந்த திட்டத்துக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடைக்கிறது. ஆகவே, 28 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இருப்பினும், வோடபோன் ஐடியாவின் 5ஜி சேவை ஒட்டுமொத்த சர்க்கிள்களிலும் கிடைக்கவில்லை.

ஆகவே, 4ஜி சேவையை மட்டுமே பெறும் கஸ்டமர்களாக இருந்தால், அவர்களும் கவலைப்பட வேண்டியது கிடையாது. ஏனென்றால், இந்த திட்டத்துக்கு 12 மணி நேர அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) சலுகை கிடைக்கும். இந்த சலுகையை நாள்ளிரவு 12 மணி முதல் பயன்படுத்தலாம். மதியம் 12 மணி வரையில் தொடர்ந்து அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும்.

28 நாட்களில் தினசரிக்கு கிடைக்கும் 2 ஜிபி டேட்டா (மொத்தம் 56 ஜிபி டேட்டா) போக 12 மணி நேரத்துக்கு அன்லிமிடெட் டேட்டாவும் கொடுக்கப்படுகிறது. இந்த தினசரி டேட்டாவை முழுவதும் பயன்படுத்தாமல் போனால், அதையும் மொத்தமாக பயன்படுத்தி கொள்ளும்படி இந்த திட்டத்தில் சலுகை இருக்கிறது. வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) சலுகையில் வருகிறது.

ஆகவே, திங்கள் முதல் வெள்ளி வரையில் தினசரிக்கு ஒதுக்கப்பட்ட 2 ஜிபி டேட்டாவில் மீதம் இருக்கும் டேட்டாவை சனி மற்றும் ஞாயிறுகளில் வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். டேட்டா டிலைட்ஸ் (Data Delight) சலுகையில் மாதத்துக்கு 2 ஜிபி டேட்டாவை பேக்கப் டேட்டாவாக பெற்று கொள்ளலாம். ஆனால், இதை விஐ ஆப் (Vi App) வழியாகவே பெற முடியும்.

இவ்வளவு டேட்டா சலுகைகள் இந்த ஒரே திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. ஆகவே, 4ஜி சேவையை பெறும் கஸ்டமர்களாக இருந்தாலும் சலுகைகளில் குறையிருக்காது. 5ஜி கஸ்டமர்களாக இருந்தால் அதிலும் குறையிருக்காது. இந்த டேட்டா சலுகைகள் போக வழக்கமாக கிடைக்கும். வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கின்றன. இதில் ஓடிடி சந்தா கிடைக்காது.

இந்த திட்டத்தை பெறும் ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் 28 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Unlimited Local, STD & Roaming Voice Calls) பெறலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். அதிகப்படியான டேட்டாவை 28 நாட்களுக்கு பெற வேண்டுமானால், இந்த திட்டத்தை கண்ணை மூடி ரீசார்ஜ் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 365 Plan Unlimited Calls 28 Days Validity Half Day Unlimited Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X