Home
News

சும்மா கிடைக்கிறத ஏன் விடனும்.. 2026-க்கு 1 புது Vi சிம் வாங்கிட்டா போச்சு.. டெய்லி 12 மணி நேரம் FREE டேட்டா!

வோடாபோன் ஐடியாவின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் இந்த 365 நாள் ரீசார்ஜை பற்றி தெரிந்துகொண்டால்.. "ஜியோவாக இருந்தாலும் சரி.. ஏர்டெல் ஆக இருந்தாலும் சரி.. எப்படியும் மாதந்தோறும் அதே ரூ.300 தான் செலவு ஆகப்போகிறது. அதற்கு பதிலாக ஏன் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து.. தினமும் 12 மணி நேரத்திற்கு கிடைக்கும் இலவச, அன்லிமிடெட் டேட்டாவை யூஸ் பண்ண கூடாது?" என்கிற கேள்வி உங்களுக்குள் எழும்!

நாம் இங்கே பேசும் திட்டம் - வோடாபோன் ஐடியாவின் ரூ.3599 சூப்பர் ஹீரோ பிளான் ஆகும். இது மாதாந்திரம் ரூ.299 என்கிற செலவில் 365 நாட்களுக்கு (அதாவது 1 ஆண்டுக்கு) சர்வீஸ் வேலிடிட்டியை வழங்கும் ஒரு பெஸ்ட் லாங்-வேலிடிட்டி பிளான் ஆகும்.

1 புது Vi சிம் வாங்கிட்டா போச்சு.. டெய்லி 12 மணி நேரம் FREE டேட்டா!

இந்த திட்டத்தின் உண்மையான ஹைலைட் "மாதம் ரூ.300 க்குள் 365 நாட்கள் வேலிடிட்டி" என்பது மட்டுமல்ல. 365 நாட்களுக்கும்.. ஒவ்வொரு நாளும், 12 மணிநேரத்திற்கு கிடைக்கும் இலவச, அன்லிமிடெட் டேட்டா நன்மை தான் - இந்த திட்டத்தின் உண்மையான ஹைலைட் ஆகும்!

இந்த திட்டத்தின் கீழ், எந்த எக்ஸ்ட்ரா செலவும் இல்லாமல், நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரை, அதாவது ஒரு நாளின் அரை நாள், அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். இன்னும் சுவாரசியமாக ரூ.3599 உடன் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் வசதியும் அணுக கிடைக்கிறது. இதன்கீழ் திங்கள்-வெள்ளி வரை பயன்படுத்தப்படாத டேட்டாவை சனி-ஞாயிற்றுக்கிழமைகளில் பயன்படுத்தலாம்.

மேலும் கூடுதல் கட்டணம் இல்லாமல், ஒவ்வொரு மாதமும் 2ஜிபி வரை பேக்கப் டேட்டாவும் கிடைக்கும். இதை வி ஆப் மூலம் கோரலாம். எல்லாவற்றை விட முக்கியமாக 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளவர்களுக்கு 5ஜி டேட்டா நன்மையையும் கிடைக்கும். ஏனென்றால் இது டெய்லி 2ஜிபி டேட்டாவுடன் வரும் பிளான் ஆகும். இதோடு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளும் 365 நாட்களுக்கும் கிடைக்கும்.

ஒட்டுமொத்தமாக இது ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டுமே வழங்காத கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள், ஏற்கனவே வி சிம் கார்டு வைத்து இருந்தால், ரூ.3599-ஐ ரீசார்ஜ் செய்யவும். இல்லாதவர்கள் தங்களுடைய தற்போதைய ஜியோ அல்லது ஏர்டெல் சிம் கார்ட்டை ஆக்டிவ் ஆக வைத்துக்கொள்ள ஆண்டுக்கு எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்று தோராயமாக கணக்கு பாருங்கள்.

அந்த தொகை ரூ.3599-க்கு இணையாக இருந்தாலும் சரி அல்லது அதிகமாக போனாலும் சரி, 2026 ஆம் ஆண்டிற்கு புதிய வி சிம் கார்டு வாங்குவதை கருத்தில் கொள்ளலாம். "டெய்லி 2ஜிபி டேட்டா போக, 12 மணி நேரத்திற்கு சும்மா கிடைக்கும் டேட்டாவை ஏன் விடனும்?" என்கிற கேள்விக்கு பதில் உங்களிடம் தான் உள்ளது.

ஜியோவின் 200 நாள் ரீசார்ஜ்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.2025 திட்டத்தின் வேலிடிட்டி 200 நாட்கள் ஆகும். இந்த திட்டம் மொத்தம் 500 ஜிபி டேட்டாவுடன் வருகிறது, அதாவது பயனர்கள் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி அளவிலான டேட்டாவை பெறுவார்கள். இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மையும் கிடைக்கும். இதோடு பயனர்கள் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களையும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும் பெறுவார்கள்.

கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, புதிய கனெக்ஷன்களுக்கு 2 மாதங்களுக்கு ஜியோஹோம் சோதனை இலவசமாக கிடைக்கும். இதோடு ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் / டிவி சந்தா 3 மாதங்களுக்கு இலவசமாக கிடைக்கும். மேலும் ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜில் 50ஜிபி இலவசமாக கிடைக்கும்.

கடைசியாக ரூ.2025-ஐ ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் 18 மாதங்களுக்கு கூகுள் ஜெமினி ப்ரோ (Google Gemini Pro) திட்டத்தை இலவசமாக பெறுவார்கள். இந்த் சாந்தாவின் மதிப்பு ரூ.35,100 ஆகும். மேலும் இது 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல்-ன் 300 நாள் ரீசார்ஜ்: இது பிஎஸ்என்எல் ரூ.1499 திட்டம் ஆகும். இது செல்லுபடியாகும் 300 நாட்களுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். கூடவே தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களும் கிடைக்கும். டேட்டா நன்மையை பொறுத்தவரை இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 32ஜிபி அளவிலான டேட்டா மட்டுமே கிடைக்கும். டேட்டா லிமிட் தீர்ந்த பின்னர் 40கேபிபிஎஸ் என்கிற ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 3599 Vi Super Hero Plan With Daily 12 Hours Free Unlimited Data 365 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X