Home
News

இனி எதுக்கு BSNL.. மாதம் ரூ.287-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி.. ஆகஸ்ட் 28-க்குள் பண்ணுங்க.. Vodafone Idea குஷி!

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துக்கு மாறும் கஸ்டமர்களை கட்டுப்படுத்த ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் வேலிடிட்டி அதிகரிப்பு மற்றும் விலை குறைப்பு சலுகைகளை அறிவிக்க திட்டமிட்டுள்ளன. இந்த நேரத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் இந்திய சுதந்திர தினத்தை வைத்து கஸ்டமர்கள் அறக்க பறக்கும்படியான சலுகைகளை அறிவித்துள்ளது. 90 நாட்களுக்கு கூடுதல் டேட்டா சலுகை முதல் ரீசார்ஜ் கட்டணங்களில் விலை குறைப்பு வரையில் பட்டையை கிளப்பி இருக்கிறது.

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு கூடுதல் டேட்டா, ஓடிடி மற்றும் விலை குறைப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.1,749 திட்டம், ரூ.3,499 திட்டம், ரூ.3,699 திட்டம் மற்றும் ரூ.3,799 ஆகிய திட்டங்களில் இந்த சலுகைகள் கிடைக்கிறது. முதலில் விலை குறைப்பு பற்றி தெரிந்து கொள்வோம்.

எதுக்கு BSNL! மாதம் ரூ.287-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி! ஆகஸ்ட் 28 வரை!

ஆகஸ்ட் 13ஆம் தேதியில் தொடங்கிய இந்த சலுகைகள் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரையில் கிடைக்க இருக்கிறது. இந்த நாட்களில் வோடபோன் ஐடியா ரூ.3,499 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், ரூ.50 டிஸ்கவுண்ட் வழங்கப்படும். ஆகவே, ரூ.3,449 விலையில் இந்த திட்டத்தை பெற்று கொள்ளலாம். இதுபோக 50 ஜிபி டேட்டா சலுகையானது 90 நாட்கள் வேலிடிட்டியோடு வருகிறது.

இதேபோல வோடபோன் ஐடியா ரூ.3,699 திட்டத்தில் ரூ.75 டிஸ்கவுண்ட், 90 நாட்கள் வேலிடிட்டி உடன் 50 ஜிபி டேட்டா மற்றும் 1 வருடத்துக்கான டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா கொடுக்கப்படுகிறது. மேலும், வோடபோன் ஐடியா ரூ.3,799 திட்டத்தில் ரூ.100 டிஸ்கவுண்ட் மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டி உடன் 50 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

முந்தைய திட்டத்தை போல ஓடிடி சந்தாவும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. ஆகவே, அமேசான் பிரைம் வீடியோ மொபைல் சந்தாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக 180 நாட்கள் வேலிடிட்டி கொண்ட வோடபோன் ஐடியா ரூ.1,749 திட்டத்தில் 30 ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கிறது. இந்த சலுகைகள் விஐ ஆப் மூலம் ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

ஆகவே, ரூ.3,499 திட்டத்தை இப்போது ரூ.3,449 விலையில் பெற்றுக் கொள்ளலாம். மாதாந்திரம் வெறும் ரூ.287 விலையில் 365 நாட்களுக்கான சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. தினசரி டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மற்றும் வோடபோன் ஐடியாவின் பிரத்யேக சலுகைகளும் இந்த திட்டத்தில் பெறலாம். இதன் முழு விவரங்களை பார்த்து விடுவோம்.

வோடபோன் ஐடியா ரூ 3499 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 3499 Plan Details): இந்த வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஆகவே, 545 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இதுபோக 50 ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கிறது. இந்த 50 ஜிபியை முதல் 90 நாட்களுக்குள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த டேட்டா சலுகைகள் போக வழக்கமாக கிடைக்கும் அன்லிமிடெட் நைட் டேட்டா, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் மற்றும் டேட்டா டிலைட்ஸ் சலுகைகள் கிடைக்கிறது. மேலும், 1.5 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையும் வருகிறது. ஆகவே, டேட்டாவில் எந்தவித குறையும் இன்றி இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) சலுகை இந்த வருடாந்திர திட்டத்தில் கிடைக்கிறது. டேட்டாவை போலவே தினசரிக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. ஆகவே, மலிவான விலையில் 4ஜி வேகத்தில் திட்டம் வேண்டுமானால், இந்த நேரத்தில் இதுதான் பெஸ்ட்டாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 3499 Plan With 365 Days Validity Gets 50GB Free Data Check Independence Day Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X