Vi பின்றானே.. ரூ.349 எடுத்து வைங்க.. அன்லிமிடெட் வாய்ஸ்.. அன்லிமிடெட் 5ஜி டேட்டா.. ஓடிடி சந்தா!
டெலிகாம் மார்கெட்டில் ரூ.349 விலை கொண்ட திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் டேட்டா சலுகைகள் கிடைக்கின்றன. ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற தனியார் நிறுவனங்களில் ரூ.349 விலை கொண்ட திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் வோடபோன் ஐடியாவில் கிடைக்கும் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, வீக்கெண்ட் டேட்டோ ரோலோவர், அன்லிமிடெட் நைட் டேட்டா மற்றும் டேட்டா டிலைட்ஸ் உள்ளிட்ட சலுகைகள் கொடுக்கப்படும். ஓடிடி பிரியர்களுக்கு ஏற்ற விஐ மூவிஸ் மற்றும் டிவி சந்தா கொடுக்கப்படும். இதுபோக வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.

வோடபோன் ஐடியா ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs 349 Prepaid Plan): நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை இந்த திட்டம் கொடுக்கிறது. இந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டா கிடைக்கும். இது 4ஜி கஸ்டமர்களுக்கு கிடைக்கும் டேட்டாவாக இருக்கிறது. வோடபோன் ஐடியா 5ஜி கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும்.
ஆனால், இந்த அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையானது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை போல நாடு முழுவதும் கிடைக்காது. வோடபோன் ஐடியாவின் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ள சில பகுதிகளில் மட்டுமே கிடைக்கும். 4ஜி கஸ்டமர்களுக்கு கூடுதலாக பல்வேறு டேட்டா சலுகைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
ஆகவே, இந்த வோடபோன் ஐடியா ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் நைட் டேட்டா (Unlimited Night Data) கிடைக்கிறது. இந்த சலுகை வழியாக நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் அன்லிமிடெட் ப்ரீ டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு அடுத்து வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) சலுகை கிடைக்கிறது.
இந்த சலுகை வழியாக திங்கள் முதல் வெள்ளி வரையிலான வார நாட்களில் மீதமுள்ள டேட்டாவை வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், பேக்கப் டேட்டா சலுகையை கொடுக்கும் டேட்டா டிலைட்ஸ் (Data Delights) இந்த வோடபோன் ஐடியா ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இதை விஐ ஆப் வழியாக பெற்று கொள்ள முடியும். மாதத்துக்கு 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். இந்த டேட்டா சலுகைகள் போக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்பட்டு இருக்கின்றன. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன.
இந்த வோடபோன் ஐடியா ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டு இருக்கிறது. நாளொன்றுக்கு கிடைக்கும் டேட்டாவில் 2 ஜிபி வேண்டுமானால், வோடபோன் ஐடியா ரூ.365 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதிலும் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது.
அன்லிமிடெட் நைட் டேட்டா, வீக்கெண்ட் டேட்டா மற்றும் டேட்டா டிலைட்ஸ் கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கிறது. இதுபோக விஐ மூவிஸ் மற்றும் டிவி சந்தாவையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. தினசரி டேட்டா 2 ஜிபியை தவிர மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாக உள்ளன.


Click it and Unblock the Notifications