அடுத்த ஆப்பு.. இனி 3 நாட்கள் இலவசம்.. 3 திட்டங்கள்.. ரூ.349-க்கு வெச்ச Vodafone Idea.. ஜியோவுக்கு கெட்ட நேரம்!
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் கட்டண உயர்வுக்கு பிறகு அதை சரிகட்ட பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஏனென்றால், பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துக்கு படையெடுக்கும் கஸ்டமர்களின் எண்ணிக்கையே அதற்கு காரணமாக இருக்கிறது. இப்போது, வோடபோன் ஐடியா கஸ்டமர்களை தக்க வைக்க மூன்று நாட்களுக்கு இலவச சலுகையை கொடுக்கிறது. இது எந்த சலுகை? எந்தெந்த திட்டங்களில் கிடைக்கிறது? உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்போது பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு அதிகப்படியான கஸ்டமர்கள் செல்வது, முன்னணி நிறுவனமான ஜியோவுக்குத்தான் லாபத்தை குறைக்கும். ஏனென்றால், புதிதாக வரும் டெலிகாம் கஸ்டமர்கள் முன்னணி நிறுவனத்துக்குத்தான் செல்ல நினைப்பார்கள். ஆனால், இப்போது அடிமட்ட விலை காரணமாக அவர்களை பிஎஸ்என்எல் தட்டித் தூக்குகிறது.

இப்போது, வோடபோன் நிறுவனம் விலையை குறைக்கவில்லை என்றாலும், போனஸ் டேட்டா சலுகையை கொடுத்து ஜியோவுக்கு அடுத்த தலைவலியை கொடுத்துள்ளது. அதாவது, திட்டத்தின் சலுகைகள் போக மேலும் இலவச டேட்டாவை வழங்கி அதற்கு 3 நாட்கள் வேலிடிட்டியும் கொடுக்கிறது. வோடபோன் ஐடியா ரூ.859, ரூ.579 மற்றும் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டங்களில் இதை கொடுக்கிறது.
வோடபோன் ஐடியா ரூ 859 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 859 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. 1.5 ஜிபி தினசரி டேட்டா (Daily Data) கிடைக்கிறது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கிறது. டேட்டாவை போலவே 100 எஸ்எம்எஸ்களை தினசரிக்கு செய்து கொள்ளலாம்.
இந்த சலுகைகள் மட்டுமல்லாமல், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover), டேட்டா டிலைட்ஸ் (Data Delights) மற்றும் பிஞ்ச் ஆல் நைட் டோட்டா (Binge All Night Data) போன்ற வோடபோன் ஐடியா கஸ்டமர்களுக்கு பிரத்யேகமாக கொடுக்கப்படும் கூடுதல் டேட்டா (Extra Data) சலுகைகளும் கிடைக்கின்றன. இப்போது போனஸ் டேட்டாவுக்கு வருவோம்.

மேற்கண்ட சலுகைகள் எல்லாமல் போக 5 ஜிபி போனஸ் டேட்டாவை (5GB Bonus Data) கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு 3 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த வேலிடிட்டிக்குள் 5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதன் பிறகு திட்டத்தின் சலுகைகள் வழக்கமாக தொடரும். பின்வரும் 2 திட்டங்களிலும் அப்படியே கிடைக்கிறது.
வோடபோன் ஐடியா ரூ 349 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 349 Plan Details): இந்த திட்டத்திலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் சலுகை கிடைக்கிறது.
அதேபோல டேட்டா டிலைட்ஸ், பிஞ்ச் ஆல் நைட் டோட்டா மற்றும் 5 ஜிபி டேட்டா போனஸ் டேட்டா சலுகைகளும் கிடைக்கிறது. இந்த 5 ஜிபி போனஸ் டேட்டாவுக்கும் 3 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. அதற்குள் பயன்படுத்தவில்லை என்றால், 5 ஜிபி டேட்டா மட்டும் காலாவதியாகிவிடும். அதன்பிறகு நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா சலுகை நீடிக்கும்.
வோடபோன் ஐடியா ரூ 579 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 579 Plan Details): இந்த திட்டத்துக்கு 56 நாட்கள் வேலிடிட்டியை பெற்று கொள்ளலாம். முந்தைய திட்டங்களை போலவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 1.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. அதேபோல கூடுதல் டேட்டா சலுகைகள் மற்றும் 5 ஜிபி போனஸ் டேட்டா சலுகை கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications