Home
News

Vodafone Idea-க்கு புது ரீசார்ஜ்.. இனிமே ரூ.340-க்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. தினசரி டேட்டா.. வேலிடிட்டி?

வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்களுக்கு புதிதாக ப்ரீபெய்ட் திட்டம் (New Prepaid Plan) களமிறக்கப்பட்டுள்ளது. மாதாந்திரத்துக்கு ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களை தட்டித் தூக்கும்படியான வேலிடிட்டியில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா, தினசரி எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், கூடுதல் டேட்டாவையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. வோடபோன் ஐடியா 5ஜி திட்டங்கள் (Vodafone Idea 5G Plans) வெளியாகியதை அடுத்து இந்த திட்டம் அனைத்து சர்க்கிள்களிலும் களமிறக்கப்பட்டுள்ளது.

வோடபோன் ஐடியா ரூ 340 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 340 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. இந்த நாட்களில் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்கிறது. ஆகவே, 28 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். இதுபோக 1 ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கிறது.

Vodafone Idea-க்கு புது ரீசார்ஜ்.. இனிமே ரூ.340-க்கு வாய்ஸ் கால்கள்!

இந்த கூடுதல் டேட்டாவுக்கு கட்டணம் கிடையாது. இலவசமாக கிடைக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) செய்து கொள்ளலாம். இதில் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையும் அடங்கும். இந்த சலுகைகள் மட்டுமே கிடைக்கிறது.

இதே வேலிடிட்டி மற்றும் சலுகைகளுடன் ஏற்கனவே வோடபோன் ஐடியாவில் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் கிடைக்கிறது. ஆனால், இதில் அந்த 1 ஜிபி கூடுதல் டேட்டா மட்டுமே கிடையாது. அதாவது, ரூ.299 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த 28 நாட்கள் முழுவதும் முந்தைய திட்டத்தில் பார்த்தபடி நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

மேலும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா, நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. இது கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சலுகைகளாக இருக்கிறது. ஆனால், முதலில் பார்த்த புதிய திட்டம் ரூ.41 விலை அதிகமாக இருக்கிறது. இதற்கு காரணம் இருக்கிறதா?

நிச்சயம் இருக்கிறது, ஏனென்றால், வோடபோன் ஐடியாவின் 5ஜி சேவைகள் மும்பை சர்க்கிளில் தொடங்கப்பட்டுவிட்டன. அதோடு பிரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களும் அறிமுகமாகிவிட்டன. ஏர்டெல் மற்றும் ஜியோவை பொறுத்தவரையில் குறிப்பிட்ட தொகை கொண்ட திட்டங்களை ரீசார்ஜ் செய்தால் மட்டுமே 5ஜி டேட்டா கிடைக்கிறது.

அதேபோல வோடபோன் ஐடியாவிலும் குறிப்பிட்ட விலைக்கு மேல் ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொடுக்கப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆகவே, இப்போது புதிதாக களமிறங்கி ரூ.340 திட்டத்தில் இருந்து அன்லிமிடெட் 5ஜி சேவை கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. இதனாலேயே இந்த திட்டம் வந்திருக்கலாம்.

மும்பையில் ரூ.299 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வோடபோன் ஐடியா கொடுக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகள் போக 5ஜி டேட்டாவை பயன்படுத்தலாம்.

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை போல இதுவும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. இப்போதைக்கு ஆரம்ப விலை 5ஜி திட்டமாக இது இருக்கிறது. நாடு முழுவதும் வோடபோன் ஐடியாவின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சேவை வந்த பிறகு அதில் மாற்றம் வரலாம். இந்த வோடபோன் ஐடியா ரூ.340 திட்டம் எதற்கு என்பதை அடுத்த சில வாரங்களில் அதிகாரப்பூர்வமாக தெரிந்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 340 Plan With Unlimited Voice Calls 1GB Data 28 Days Validity Check New Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X