Vodafone Idea ஏதோ பிளான் பண்றான்.. திடீரென டெய்லி 1GB க்கு பதிலாக 2GB டேட்டா.. எந்த திட்டத்தில்?
இந்திய டெலிகாம் துறையில், வோடாபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் நிலைமை எப்படி இருக்கிறது என்றால்.. "ஐயா.. கொஞ்சம் பெரிய மனசு பண்ணி ஏதாச்சும் செஞ்சு விடுங்க ஐயா!" என்று இந்திய அரசாங்கத்தின் உதவியை எதிர்நோக்கி கொண்டிருக்கும் அளவில் தான் இருக்கிறது.
இந்நிலையிலும் கூட வி (Vi) நிறுவனமானது "ஒரு தரமான சிறப்பான சம்பவத்தை" செய்துள்ளது. ஒரு குறிப்பிட்ட டெலிகாம் வட்டத்தில் மட்டும், டெய்லி 1ஜிபி டேட்டாவை வழங்கிய ஒரு மாதாந்திர ப்ரீபெய்ட் பிளானின் டேட்டா நன்மையை டெய்லி 2ஜிபி ஆக அதிகரித்து உள்ளது.

எந்த திட்டத்தில்? இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடாபோன் ஐடியா லிமிடெட் (VIL) ஆனது அதன் ரூ.340 திட்டத்துடன் வழங்கப்படும் டேட்டா நன்மைகளை அதிகரித்துள்ளது. 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வரும் ரூ.340 திட்டம் இப்போது டெய்லி 1ஜிபி டேட்டாவிற்கு பதிலாக டெய்லி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது
எந்த வட்டத்தில்? வோடாபோன் ஐடியாவின் ரூ.340 திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றம் தற்போது இமாச்சலப் பிரதேச வட்டத்தில் மட்டுமே பிரதிபலிக்கிறது. மற்ற வட்டங்களில் தற்போது வரையிலாக அதே பழைய டேட்டா நன்மையே (டெய்லி 1ஜிபி) அணுக கிடைக்கிறது. இந்த மாற்றம் மற்ற டெலிகாம் சர்க்கிள்களுக்கும் வருமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
ரூ.340 திட்டத்தின் மற்ற நன்மைகள்: இமாச்சலப் பிரதேசத்தில் முன்னதாக 1 ஜிபி தினசரி டேட்டாவை வழங்கிய ரூ.340 திட்டமானது, இப்போது 2 ஜிபி தினசரி டேட்டாவை வழங்குகிறது. இதோடு இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்கும்
இதனுடன், ரூ.340 திட்டத்தின் பயனர்கள் நிறுவனத்திடமிருந்து 1 ஜிபி கூடுதல் டேட்டாவையும் பெறுகிறார்கள். இதில் வரம்பற்ற இரவு நேர டேட்டா சலுகையும் (காலை 12 மணி முதல் காலை 6 மணி வரை) உள்ளது. வார இறுதி டேட்டா ரோல்ஓவர் சலுகையும் உள்ளது, இதன்கீழ் வார நாட்களில் பயன்படுத்தப்படாத அனைத்து டேட்டாவையும் வார இறுதிகளில் பயன்படுத்தலாம்.
இந்திய அரசாங்கத்திடம் இருந்து வி நிறுவனத்திற்கு என்ன உதவி தேவை? வோடபோன் ஐடியா லிமிடெட் (Vodafone Idea Limited - VIL) ஆனது மிகவும் அவசரமாக அரசாங்க உதவியை எதிர்பார்க்கிறது. ஏனென்றால் - வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் தோள்களில் அரசாங்கம் ஒரு பெரிய கடனை சுமத்தியுள்ளது. இங்கே நாம் "கடன்" என்று பேசுவது - ஏஜிஆர் (AGR) என்கிற சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் நிலுவைத் தொகை (Adjusted gross revenue dues) ஆகும்.
இந்நிறுவனத்தின் ஏஜிஆர் நிலுவை தொகை ஆனது அது வசதியாக செலுத்தக்கூடியதை விட அதிகமாக உள்ளது, வங்கிகள் மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து அதிக கடன்கள் வரவிருக்கின்றன. எனவே இந்த தொலைத்தொடர்பு நிறுவனம் அரசாங்க உதவியை நாடியிருந்தது; மேலும் கடந்த சில ஆண்டுகளில் இந்திய அரசும் ஏராளமான ஆதரவை வழங்கியும் உள்ளது.
அரசாங்கம் செய்த முக்கிய விஷயங்களில் ஒன்று - நிலுவையில் உள்ள நிலுவைத் தொகைகளுக்கு எதிராக நிறுவனத்தில் பங்குகளை (Equity in the company) எடுத்துக்கொள்வது. இது தொலைத்தொடர்பு நிறுவனத்தின் நிலுவைத் தொகையைக் குறைத்தது மட்டுமல்லாமல், அதற்கு சிறிது ஓய்வும் அளித்தது. வோடபோன் ஐடியாவில் தற்போது இந்திய அரசாங்கத்தின் பங்கு மிகப்பெரிய அளவில் உள்ளது.
இன்னும் சொல்லப்போனால் 50% க்கு மிக அருகில் உள்ளது. வோடபோன் ஐடியாவை அரசாங்கத்தால் நடத்தப்படும் நிறுவனமாக (Government run company) மாற்ற இந்திய அரசாங்கத்திடம் எந்த நோக்கமும் இல்லை. எனவே, அது இந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தில் மேலும் எந்த பங்குகளையும் எடுக்காது. மேலும் இந்திய அரசாங்கமானது இந்நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் நிறுவனத்தின் நிர்வாகத்தில் தலையிடவும் விரும்பவில்லை.


Click it and Unblock the Notifications








