Home
News

வோடபோனுக்கு கும்பிடு.. மாதம் ரூ.266 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்.. ஓடிடி சந்தா!

ஜியோ நிறுவனமே மிரளும் விதமாக மாதத்துக்கு வெறும் ரூ.266 செலவில் 365 நாட்களுக்கு டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ், எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல் அமேசான் பிரைம் வீடியோ சப்ஸ்கிப்ஷனையும் வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்குகிறது. இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டத்தின் விவரம் இதோ.

வோடபோன் ஐடியா ரூ 3199 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 3199 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சலுகைகள் மட்டுமல்லாமல், பிஞ்ச் ஆல் நைட், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர், டேட்டா டிலைட்ஸ் போன்ற பல்வேறு சலுகைகள் கொடுக்கப்படுகிறது.

மாதம் ரூ.266 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்!

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். அதோடு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, மொத்தமாக 730 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த டேட்டா மட்டுமல்லாமல், பிஞ்ச் ஆல் நைட் (Binge All Night) டேட்டா சலுகையின் கீழ் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், டேட்டா டிலைட்ஸ் (Data Delights) சலுகையில் கீழ் மாதந்தோறு் 2 ஜிபி ப்ரீ டேட்டா பெற்று கொள்ளலாம்.

இந்த டேட்டாவை பெற 121249 என்ற எண்ணுக்கு கால் செய்யலாம் அல்லது விஐ ஆப் மூலம் கிளைம் செய்து கொள்ளலாம். அதே போல, நாள்தோறும் 2 ஜிபி டேட்டாவில் மீதமாகும் டேட்டாவை வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) சலுகையின் கீழ் வார இறுதி நாட்களில் பயன்படுத்தி கொள்ள முடியும்.

மாதம் ரூ.266 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்!

இவ்வளவு சலுகைகள் போக ஒரு வருடத்துக்கான அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் ( Amazon Prime Video Mobile Edition) சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது. அதோடு விஐ மூவிஸ் மற்றும் டிவி (Vi Movies and TV) சப்ஸ்கிரிப்ஷனை பெற்றலாம். இந்த திட்டத்துக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

ஆகவே, வருடம் முழுக்க எந்தவொரு திட்டமும் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படாது. இந்த திட்டத்துக்கான மாதாந்திர செலவை பார்த்தால், வெறும் ரூ 266 மட்டுமே தேவைப்படுகிறது. ஆகவே, நல்ல சலுகை கொண்ட திட்டமாகவே இருக்கிறது. ஒருவேளை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வேண்டுமனால், ரூ 3099 திட்டத்தை தேர்ந்தெடுங்கள்.

வோடபோன் ஐடியா ரூ 3099 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 3099 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த நாட்களில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம், மொத்தமாக 730 ஜிபி டேட்டாவை பெற்றுகொள்ளலாம். அதேபோல தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது.

முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்திலும், பின்ஞ் ஆல் நைட், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர், டேட்டா டிலைட்ஸ் மற்றும் விஐ மூவிஸ் மற்றும் டிவி ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் ஒரு வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 2ஜிபி தினசரி டேட்டாவை முழுமையாக பயன்படுத்திய பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்துக்கான மாதம் ரூ 258 செலவாகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 3199 Plan With 365 days Validity, 2GB Data, OTT Subscription Check One Year Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X