ஏப்.1 கடைசி.. ரூ.100 ரீசார்ஜ் விலை குறைப்பு.. போனஸ் டேட்டா.. ஜியோவுக்கு விபூதி.. ஐபிஎல் 2024-க்கு அடித்த ஆபர்!
முகேஷ் அம்பானியின் ஜியோ (Jio) நிறுவனமே மூக்கில் விரல் வைக்கும்படி ஐபிஎல் 2024 (IPL 2024) போட்டிகளை முன்னிட்டு ரூ.100 ரீசார்ஜ் விலை குறைப்பு, 50 ஜிபி போனஸ் டேட்டா என்று ஆஃபர்களை அள்ளிக் கொட்டி இருக்கிறது வோடபோன் ஐடியா நிறுவனம்.
ரூ.75 முதல் ரூ.3099 வரையில் பல்வேறு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு டிஸ்கவுண்ட் மற்றும் போனஸ் டேட்டா அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் அனைத்தும் மார்ச் 21ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 1ஆம் தேதி வரையில் ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. இப்போது, ஒவ்வொரு திட்டங்களையும், அதன் சலுகைகளையும் பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ 699 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 699 Plan Details): இந்த திட்டத்தில் 56 நாட்கள் வேலிடிட்டி, நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகை வருகிறது. இப்போது, ஐபிஎல் 2024 போட்டிகளை முன்னிட்டு ரூ.50 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.
வோடபோன் ஐடியா ரூ 1449 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1449 Plan Details): இந்த திட்டத்தில் 180 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் தினசரி 1.5 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 270 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது.
அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகை கிடைக்கிறது. விஐ மூவிஸ் மற்றும் டிவி, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் போன்ற சலுகைகள் வருகிறது. இந்த சலுகைகள் போக ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு ரூ.50 டிஸ்கவுண்ட் மற்றும் 30 ஜிபி கூடுதல் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

வோடபோன் ஐடியா ரூ 2899 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1449 Plan Details): இந்த திட்டத்தில் 365 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம்.
அதேபோல தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகையும், விஐ மூவிஸ் மற்றும் டிவி சந்தாவும் கிடைக்கிறது. இப்போது, ஐபிஎல் 2024 சலுகை காரணமாக ரூ.100 டிஸ்கவுண்ட் மற்றும் 50 ஜிபி கூடுதல் டேட்டாவை இந்த திட்டம் கொடுக்கிறது. ஏப்ரல் 1ஆம் தேதி வரையில் மட்டுமே இந்த ஐபிஎல் சலுகை கிடைக்கும்.
வோடபோன் ஐடியா ரூ 3099 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 3099 Plan Details): இந்த திட்டத்துக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகை வருகிறது. ஹாட்ஸ்டார் சாந்தா கிடைக்கிறது. ஐபிஎல் சலுகைகளை பார்க்கையில், 50 ஜிபி கூடுதல் டேட்டா வருகிறது.
6 ஜிபி டேட்டா சலுகை கொண்ட ரூ.75 ப்ரீபெய்ட் திட்டத்தில் 1.5 ஜிபி கூடுதல் டேட்டா கொடுக்கப்படுகிறது. அதேபோல நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வீதம் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.181 மதிப்புள்ள திட்டத்தில் ஒவ்வொரு நாளுக்கும் கூடுதலாக 500 எம்பி டேட்டா கொடுக்கப்படுகிறது.
இந்த சலுகைகளை பெற விஐ ஆப் மூலம் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதேபோல ஏர்டெல், ஜியோ நிறுவனங்களும் ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு பல்வேறு சலுகைகளை கொடுக்கின்றன. ஆனால், விலை குறைப்பை வோடபோன் ஐடியா மட்டுமே செய்திருக்கிறது. ஐபிஎல் போட்டிகள் இன்று முதல் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








