வோடபோன் ஆட்டம்.. மாதத்துக்கு ரூ.258 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. ஓடிடி சந்தா!
வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு மாதம் வெறும் ரூ.258 செலவில் 365 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ், 2 ஜிபி டேட்டா மற்றும் ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படிவொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இதுகுறித்த முழு விவரம் இதோ.
வோடபோன் ஐடியா ரூ 3099 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 3099 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகை வழங்கப்படுகிறது. ஆகவே, மொத்தமாக 730 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம்.

அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். இந்த சலுகைகள் போக வோடபோன் ஐடியாவின் பிரத்யேக சலுகைகளான பின்ஞ் ஆல் நைட் (Binge All Night), வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) மற்றும் டேட்டா டிலைட் (Data delights) ஆகியவற்றை பெற்று கொள்ளலாம்.
ஆகவே, நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் அன்லிமிடெட் ப்ரீ டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டாவானது, திட்டத்தின் டேட்டாவில் இருந்து கழிக்கப்படாது. அதேபோல உங்களுக்கு ஒதுக்கப்பட்ட தினசரி டேட்டாவில் பயன்படுத்தாமல்விட்ட டேட்டாவை வார இறுதி நாட்களில் பயன்படுத்திகொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் 2 ஜிபி பேக்கப் டேட்டா கொடுக்கப்படும்.
அதுமட்டுமல்லாமல், ஒரு வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) மற்றும் விஐ மூவிஸ் மற்றும் டிவி (Vi movies & TV) சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த ஒரே திட்டத்தின் மூலம் டேட்டா, வாய்ஸ், ஓடிடி சலுகைகளை ஒரு வருடத்துக்கு பெற்று கொள்ள முடிகிறது.

ஒருவேளை உங்களுக்கு ஓடிடி சலுகை தேவைப்படாமல், ஒரு வருடத்துக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா சலுகைகள் மட்டும் வேண்டும் என்றால், ரூ 2899 விலையில் கிடைக்கும் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் முழு சலுகைகளையும் இப்போது பார்ப்போம்.
வோடபோன் ஐடியா ரூ 2899 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 2899 Plan Details): இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் 365 நாட்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். முந்தைய திட்டத்தை போலவே நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது.
அதேபோல நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 547.5 ஜிபி டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. இந்த 1.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம். மேலும், முந்தைய திட்டத்தைபோல பின்ஞ் ஆல் நைட், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் மற்றும் டேட்டா டிலைட் சலுகை கிடைக்கிறது.

அதுமட்டுமல்லாமல், விஐ மூவிஸ் மற்றும் டிவி சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கான மாதந்திர செலவை பார்த்தால், ரூ 241 தேவைப்படுகிறது. அதேபோல முந்தைய திட்டத்துக்கு ரூ 258 தேவைப்படுகிறது. ஆகவே, இந்த 2 ப்ரீபெய்ட் திட்டங்களும் வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு நல்ல சலுகை கொண்டதாகவே இருக்கின்றன.
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்களை தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் விரைவில் 5ஜி சேவையை வழங்க இருக்கிறது. டெல்லி, புனே போன்ற முக்கிய நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஆகவே, வரும் மாதங்களில் அடுத்தடுத்த நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படும் என்பது உறுதியாகிவிட்டது.


Click it and Unblock the Notifications








