இதுக்குமேல முடியாது.. வோடபோன் ஐடியா எடுத்த அதிரடி முடிவு.. ஒரே திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி!
வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம், 365 நாட்களுக்கு அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால் கொண்ட பிரம்மாண்ட் பிளானை களமிறக்கியிருக்கிறது. அதோடு நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் ப்ரீ டேட்டாவை வழங்குகிறது. இதுகுறித்த விவரம் இதோ.
இந்தியாவில் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) போன்ற இரண்டு மிகப்பெரும் டெலிகாம் நிறுவனங்களுக்கு அடுத்தப்படியாக கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வோடபோன் ஐடியா நிறுவனம், தொடர்ந்து அதிரடியான திட்டங்களை அறிவித்து வருகிறது. ஏனென்றால், இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் கொத்துக் கொத்தாக மாற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு மாறி வருகின்றனர்.

இந்த நிலைமையே நீடித்தால், அந்த நிறுவனத்தை இழுத்து மூட வேண்டிய சூழல் கூட ஏற்படும் அல்லது மத்திய அரசிடம் நிறுவனத்தை ஒப்படைக்கும் நிலையும் வரக்கூடும். இதை வோடபோன் நிறுவனமும் நன்றாகவே அறிந்திருக்கிறது. ஆகவே, லாபத்தை பார்க்காமல், புதுப்புது திட்டங்களை வாரிக்கொடுத்து வருகிறது. சமீபத்தில் கூட ரூ.49 விலையில் 24 மணி நேர டேட்டா பிளானையும், ரூ.24 விலையில் அன்லிமிடெட் டேட்டா பிளானையும் அறிவித்தது.
இந்த திட்டங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், புதிதாத ரூ. 198 மற்றும் ரூ. 204 விலையில் இரண்டு ப்ரீபெய்ட் காம்போ பிளான்களை அறிவித்தது. இந்த திட்டங்கள் ஓரளவுக்கு வாடிக்கையாளர்களை திருப்திபடுத்திய நிலையில், இப்போது, ரூ 2999 திட்டத்தை களமிறக்கியிருக்கிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால்களை 365 நாட்களுக்கும் வழங்குகிறது. அதோடு கூடுதல் டேட்டா, ப்ரீ நைட் டேட்டா என்று பல்வேறு சலுகைகள் உள்ளன.
வோடபோன் ஐடியா ரூ 2999 பிளான் (Vodafone Idea Rs 2999 Plan): இதுவொரு 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளானாகும். இந்த பிளானை ரீசார்ஜ் செய்தால், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ், 850 ஜிபி டேட்டா கிடைக்கும். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இதுமட்டுமல்லாமல், பல்வேறு கூடுதல் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில், அன்லிமிடெட் நைட் டோட்டா வழங்கப்படும். அதாவது, நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்திக்கொள்ள முடியும். இதோடு விஐ மூவிஸ் மற்றும் டிவி கிளாசிக் ( Vi Movies & TV Classic) தளத்தையும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இந்த திட்டத்தில் மற்றொரு சலுகையாக, நாளொன்றுக்கு கொடுக்கப்படும் 2 ஜிபி டேட்டாவை முழுமையாக பயன்படுத்தினாலும், அதற்கு மேலும் டேட்டாவை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். இதன் மூலம் 365 நாட்களும் தடையில்லா டேட்டா சேவை உறுதி செய்யப்படும். இருப்பினும், 850 ஜிபி டேட்டாவுக்கு மேல் பயன்படுத்த முடியாது.
ஆனால், நைட் டேட்டா ப்ரீயாக கொடுக்கப்படும். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








