Home
News

Vodafone-க்கு கும்பிடு.. 5G இறக்கிவிட்டாச்சு.. ரூ.299-க்கு 28 நாட்கள்.. அன்லிமிடெட் 5ஜி.. வாய்ஸ் கால்கள்!

வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் காத்திருந்த நேரம் வந்துவிட்டது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் (Prepaid Plan) ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. ரூ.299 முதல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டங்கள் தொடங்குகின்றன. 28 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், இந்த திட்டம் மாலிவாகவே இருக்கிறது. இப்போதைக்கு மும்பை சர்க்கிளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், இதே விலையில் மற்ற சர்க்கிள்களிலும் கிடைக்க போகிறது.

வோடபோன் ஐடியா அன்லிமிடெட் 5ஜி திட்டங்கள் வழக்கம்போல 28 நாட்கள், 56 நாட்கள், 84 நாட்கள் மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டியில் கிடைக்கிறது. இதில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களில் மட்டுமே மலிவான விலைக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. ஆகவே, இந்த வேலிடிட்டியில் கிடைக்கும் திட்டங்களை மட்டுமே இப்போது பார்க்கப் போகிறோம்.

Vodafone-க்கு கும்பிடு.. 5G இறக்கிவிட்டாச்சு.. ரூ.299-க்கு 28 நாட்கள்!

வோடபோன் ஐடியா ரூ 299 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 299 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரேமிங் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் மேற்கண்ட சலுகைகள் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது.

வோடபோன் ஐடியா ரூ 349 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 349 Plan Details): இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, பிஞ்ச் ஆல் நைட் டேட்டா, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் மற்றும் டேட்டா டிலைட் சலுகைகள் வருகின்றன.

வோடபோன் ஐடியா ரூ 365 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 365 Plan Details): இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, 12 மணி நேர இலவச டேட்டா, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் மற்றும் டேட்டா டிலைட்ஸ் சலுகை கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் 28 நாட்களுக்கு கிடைக்கிறது.

வோடபோன் ஐடியா ரூ 407 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 407 Plan Details): இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, 12 மணி நேர இலவச டேட்டா, வீக்கெண்ட் டேட்டா, டேட்டா டிலைட்ஸ் சலுகை உள்ளது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் சன்நெக்ஸ்ட் ஓடிடி சந்தா கொடுக்கப்படுகிறது.

வோடபோன் ஐடியா ரூ 408 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 408 Plan Details): இந்த திட்டத்துக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி, 12 மணி நேர இலவச டேட்டா, வீக்கெண்ட் டேட்டா, டேட்டா டிலைட்ஸ் சலுகை வருகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ் மற்றும் சோனிலிவ் சலுகை வருகிறது.

வோடபோன் ஐடியா ரூ 409 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 409 Plan Details): இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி, 12 மணி நேர இலவச டேட்டா, வீக்கெண்ட் டேட்டா, டேட்டா டிலைட்ஸ் சலுகைகள் உள்ளது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். 28 நாட்கள் வேலிடிட்டி உள்ளது.

வோடபோன் ஐடியா ரூ 449 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 449 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. இதுபோக நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி, 12 மணி நேர இலவச டேட்டா, வீக்கெண்ட் டேட்டா, டேட்டா டிலைட்ஸ் சலுகைகள் உள்ளது. 28 நாட்கள் வேலிடிட்டி, வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 299 Plan Unlimited 5G Data 28 Days Validity Cheapest 5G Plans For Mumbai Circle
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X