ஜியோவை விட மிக சிறந்த நன்மைகள் கிடைக்கும் Vi ரூ. 299 திட்டம்.. உண்மையிலேயே ஜியோவை விட சிறந்ததா?
Vodafone Idea (Vi) அதன் ரூ. 299 ப்ரீபெய்ட் திட்டத்தை Vi Hero நன்மைகள் கொண்ட பயனர்களுக்கு வழங்குகிறது. இது ஒரு குறுகிய செல்லுபடியாகும் திட்டமாகும். மேலும் தனியார் ஆபரேட்டர்களிடமிருந்து ப்ரீபெய்ட் கட்டண உயர்வுக்குப் பிறகு, இது பயனர்களுக்கான சந்தையில் சிறந்த விருப்பங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஜியோ நிறுவனமும் இதே விலையில் ரூ. 299 என்ற ப்ரீபெய்ட் திட்டத்தையும் அதன் பயனர்களுக்கு வழங்குகிறது. எப்போதும் போல, ஜியோ அதன் போட்டியை விடக் கூடுதலாக ஏதாவது வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உண்மையிலேயே ஜியோவை விட Vi இன் ரூ. 299 ப்ரீபெய்ட் திட்டம் சிறந்ததா?
இருப்பினும், ஜியோ வழங்குவதை விட Vi இன் ரூ. 299 ப்ரீபெய்ட் திட்டத்தை ஒரு சிறந்த தேர்வாக மாற்றும் சில விஷயங்கள் உள்ளன என்பதை இங்கே நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். வோடபோன் ஐடியா அதன் ரூ. 299 திட்டத்தைப் பல டன் நன்மைகளுடன் வழங்குகிறது. இது ஏர்டெல் மற்றும் ஜியோ வழங்குவதை விட சிறந்ததாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. Vodafone Idea (Vi) அதன் ரூ. 299 ப்ரீபெய்ட் திட்டத்தை 28 நாட்கள் குறுகிய செல்லுபடியுடன் வழங்குகிறது. இந்த திட்டம் வழங்கும் நன்மைகளைப் பற்றித் தெளிவாகப் பார்க்கலாம்.

Vodafone Idea அல்லது Vi வழங்கும் ரூ. 299 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா அல்லது விஐ வழங்கும் ரூ. 299 ப்ரீபெய்ட் திட்டமானது 28 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் அதன் பயனர்களுக்குத் தினமும் 1.5 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன் இந்த திட்டத்தின் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 SMS நன்மை ஆகியவற்றைச் சேர்த்து செல்லுபடியாகும் காலம் முடியும் வரை வழங்குகிறது. இது தவிர, Vi ப்ரீபெய்ட் திட்டத்தின் பயனர்களுக்கு Binge All Night, Weekend Data Rollover மற்றும் Data Delights சலுகைகளும் கிடைக்கிறது.

இன்னும் ஏராள நன்மைகள் இருக்கிறது மக்களே
இத்துடன் இந்த திட்டத்தின் நன்மைகள் முடிந்துவிட்டது என்று தவறாக நினைத்துவிடாதீர்கள். இன்னும், சில நன்மைகளும் இந்த திட்டத்துடன் கிடைக்கிறது. இத்திட்டம் Vi Movies & TV கிளாசிக் அணுகலின் கூடுதல் ஓவர்-தி-டாப் (OTT) சந்தாவுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு மாறாக, ஜியோ தனது ப்ரீபெய்ட் திட்டத்தை அதே வேலிடிட்டி, குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளுடன் வழங்குகிறது. இருப்பினும், ஜியோவின் திட்டத்தில் வழங்கப்படும் டேட்டா தினசரி 2ஜிபி ஆகும். இது Vi இன் திட்டத்தில் பயனர்கள் பெறுவதை விட 500 எம்பி அதிகம்.

ஜியோ பயனர்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய விஷயமே இது தான்
இதில் ஜியோ பயனர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்றாலும், Vi இன் திட்டம் Vi Hero நன்மைகளைத் தொகுக்கிறது என்பது உண்மை தான். டேட்டா டிலைட்ஸ் கீழ் வழங்கப்படும் எமர்ஜென்சி டேட்டா, Binge All Night நன்மையுடன் கூடிய வரம்பற்ற அதிவேக டேட்டா மற்றும் வார இறுதி நாட்களில் மீதமுள்ள நியாயமான பயன்பாட்டுக் கொள்கை (FUP) தரவைப் பயன்படுத்துவதற்கான வார இறுதி டேட்டா ரோல்ஓவர் சலுகை ஆகியவை மிகவும் நல்ல விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நன்மைகள் உங்களுக்கு ஜியோவுடன் கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் வழங்கும் ரூ. 299 விலை ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் என்ன?
இதேபோல், ஏர்டெல் நிறுவனம் கூட அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 299 விலையில் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில், பயனர்கள் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி, வரம்பற்ற குரல் அழைப்பு, தினமும் 100 SMS நன்மை மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் பலன்களை வாடிக்கையாளர்கள் பெறுகிறார்கள். Vi இன் திட்டத்தில் இருந்து இது மிகவும் வேறுபட்டதல்ல, ஆனால் பயனர்களுக்கு Vi Hero அன்லிமிடெட் வழங்கும் பலன்களுடன் இது வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

பின்ங்கே ஆள் நைட் நன்மை என்றால் என்ன?
இந்தியாவில் உள்ள எந்தவொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் வழங்காத கூடுதல் நன்மை Vi மட்டுமே வழங்குகிறது. குறிப்பாக பின்ங்கே ஆள் நைட் நன்மை, வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர் நன்மை போன்ற நன்மைகளை வேறு எந்த தொலைத்தொடர்பு நிறுவனமும் வழங்கவில்லை. பின்ங்கே ஆள் நைட் நன்மையானது உங்களுக்கு இரவு முழுக்க இலவசமாக ஆலிமிடெட் அதிவேக டேட்டா நன்மையை வரம்பின்றி வழங்குகிறது. இந்த நன்மையின் மூலம், உங்கள் இஷ்டம் போல நீங்கள் விரும்பும் அளவிற்கு டேட்டாவை இரவு முழுக்க பயன்படுத்திக்கொள்ளலாம்.

வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர் நன்மை என்றால் என்ன?
அதேபோல், வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர் நன்மை என்பது, நீங்கள் தேர்வு செய்து பயன்படுத்திக்கொண்டிருக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் தினசரி கிடைக்கும் டேட்டா நன்மையை ஒட்டுமொத்தமாகச் சேர்த்து வார இறுதியில் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள இந்த சேவை அனுமதிக்கிறது. உதாரணத்திற்கு, தினமும் நீங்கள், உங்களுக்குக் கிடைக்கும் 2ஜிபி டேட்டாவில் வெறும் 1ஜிபி டேட்டாவை மற்றும் பயன்படுத்திவருகிறீர்கள் என்றால், வார இறுதியில் நீங்கள் பயன்படுத்தாத டேட்டா அளவை ஒட்டுமொத்தமாக சேர்த்துப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவீர்கள். இது உண்மையில் சிறந்த விஷயம் தான். இதனால் தான் Vi, ஜியோவை விட சிறந்ததாகக் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








