Home
News

போடு.. வோடபோன் பக்கா பிளான்.. ரூ.296 போதும்.. OTT சப்ஸ்கிரிப்ஷன்.. 25GB டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்!

வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் வழங்கும் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களில் (30 Days Validity Plans) டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், குறைவான விலையில் ஓடிடி சலுகையையும் கொடுக்கும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

வோடபோன் ஐடியா ரூ 296 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 296 Plan Details): வோடபோனில் வழங்கப்படும் 30 நாட்கள் திட்டங்களிலேயே மிகவும் குறைவான விலையில் நல்ல சலுகைகளை இந்த திட்டம் வழங்குகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் (unlimited voice calling) சலுகை கிடைக்கும்.

வோடபோன் பக்கா பிளான்.. ரூ.296 போதும்.. OTT சந்தா.. 25GB டேட்டா!

அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ள முடியும். இந்த திட்டத்தில் தினசரி டேட்டா வழங்கப்படவில்லை என்றாலும், மொத்தமாக 25 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டாவுக்கு லிமிட் கிடையாது. அதேபோல 25 ஜிபி டேட்டா முடிந்த பின்பு ஃபேர் யூசேஜ் பாலிசி (fair usage policy) டேட்டாவும் கிடைக்காது.

இருப்பினும், இந்த திட்டத்தில் ஓடிடி (OTT) சலுகை கிடைக்கிறது. விஐ மூவிஸ் & டிவி கிளாசிக் (Vi Movies & TV Classic) தளத்தின் சப்ஸ்கிரிப்ஷன் ஒரு மாதத்துக்கு கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்களாகும். மொத்தமாக டேட்டா தேவைப்படும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் பொருத்தமாக இருக்கும்.

வோடபோன் ஐடியா ரூ 368 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 368 Plan Details): இந்த திட்டத்தில் டெய்லி டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 60 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கும்.

அதோடு தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகையும் கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், சன்நெக்ஸ்ட் டிவி + மொபைல் (SunNXT TV + Mobile) மற்றும் விஐ மூவில் & டிவி விஐபி (Vi Movies & TV VIP) சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது. மேலும் விஐ ஹீரோ அன்லிமிடெட் சலுகைகள் (Vi Hero Unlimited Benefits) இந்த திட்டத்துக்கு பொருந்தும்.

ஆகவே, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover), பின்ஞ் ஆல் நைட் (Binge All Night) மற்றும் டேட்டா டிலைட்ஸ் (Data Delights) ஆகிய சலுகைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. விஐ ஹீரோ அன்லிமிடெட் சலுகைகளுடன் ஓடிடி தேவைப்படும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் நல்ல தேர்வாக இருக்கும்.

வோடபோன் ஐடியா ரூ 369 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 369 Plan Details): வோடபோன் ஐடியாவின் 30 நாட்கள் வேலிடிட்டி திட்டங்களில் அதிக சலுகைகளை கொண்ட திட்டமாக ரூ 369 திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகைகள் கிடைக்கும்.

தினசரி 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். முந்தைய திட்டத்தைப் போலவே, சன்நெக்ஸ்ட் டிவி + மொபைல் மற்றும் விஐ மூவில் & டிவி விஐபி ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. ஆனால், இந்த திட்டத்தில் கூடுதலாக சோனிலிவ் மொபைல் (SonyLIV Mobile) சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது.

அதோடு விஐ ஹீரோ அன்லிமிடெட் சலுகைகள் கிடைக்கும். அதன்படி வீக்கெண்ட் டேட்டா ரோலோவர், பின்ஞ் ஆல் நைட் மற்றும் டேட்டா டிலைட்ஸ் சலுகைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் சோனிலிவ் தளத்தின் சப்ஸ்கிரிப்ஷனுடன் விஐ ஹீரோ அன்லிமிடெட் சலுகை கிடைப்பதால், 30 நாட்கள் திட்டத்தில் சிறந்த திட்டமாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 296 Plan Offer 25GB Data, 30 Day Validity Unlimited Voice Calling OTT Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X