வாரி வழங்கிய விஐ.. ரூ.289-க்கு 40 நாட்கள்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 4 ஜிபி டேட்டா.. குஷியில் கஸ்டமர்கள்!
வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்களுக்கு மலிவான விலையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல், 4 ஜிபி டேட்டா சலுகையுடன் 40 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தால், குஷியாக்கத்தானே இருக்கும். அப்படியான ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) அந்த நிறுவனம் கொடுக்கிறது. இப்படி மலிவான விலைக்கு லம்ப்-சம் டேட்டாவுடன் (Lumpsum Data) கிடைக்கும் திட்டங்களை வோடபோன் ஐடியா திட்டங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வோடபோன் ஐடியா ரூ 289 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 289 Plan Details): 28 நாட்கள், 30 நாட்கள் அல்லது காலண்டர் மாத வேலிடிட்டி திட்டம் வேண்டாம், அதேபோல 2 மாதங்கள் வேலிடிட்டியும் வேண்டாம். இதற்கு இடையில் ஏதாவது ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறதா என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு இந்த ரூ 289 திட்டம் பக்கா ஆப்ஷனாக இருக்கும்.

இதற்கு 40 நாட்கள் வேலிட்டி கிடைக்கிறது. இந்த 40 நாட்கள் முழுவதுக்கும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகளை கொடுக்கிறது. அதேபோல 4 ஜிபிக்கான லம்ப்-சம் டேட்டா சலுகை கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டா கொடுக்கப்படாது.
ஆகவே, அதற்கு பிறகு டேட்டா வவுச்சர் தேவைப்படலாம். இதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். இந்த லம்ப்-சம் டேட்டா திட்டத்துக்கு எஸ்எம்எஸ் சலுகையும் கிடைக்கிறது. ஆகவே, 600 எஸ்எம்எஸ் சலுகை மொத்தமாக கொடுக்கப்படும். இதை 40 நாட்களில் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம். இதற்கு தினசரி லிமிட் கிடையாது.
இதேபோல லம்ப்-சம் டேட்டா திட்டத்தில் அதிக டேட்டாவுடன் வாய்ஸ் கால்கள் கிடைக்கும் மற்றொரு திட்டமும் இருக்கிறது. இதற்கு விலைக்கு ஏற்ப டேட்டா மட்டுமல்லாமல், வேலிடிட்டியும் அதிகமாக கிடைக்கும். ஆகவே, அன்லிமிடெட் வாய்ஸ் கால்களுடன் அதிக லம்ப்-சம் டேட்டா வேண்டுமானால், இதை ரீசார்ஜ் செய்யலாம்.
வோடபோன் ஐடியா ரூ 625 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 625 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 60 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களுக்கு மொத்தமாக 50 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கு பிறகும் போஸ்ட் டேட்டா கிடைக்காது. அதேபோல 50 ஜிபிக்கு பிறகு டேட்டா வவுச்சர் தேவைப்படலாம்.
இருப்பினும், 50 ஜிபி என்பது இந்த திட்டத்துக்கு போதுமானதாகவே இருக்கிறது. இதுவொரு லம்ப்-சம் டேட்டா திட்டமாக இருந்தாலும், இதற்கு தினசரி லிமிட்டில் எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. ஆகவே, தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், முந்தைய திட்டத்தில் வந்த அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் கிடைக்கிறது.
லம்ப்-சம் டேட்டா வேண்டாம், அதிக வேலிடிட்டி மட்டும் போதும், அதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் லம்ப்-சம் எஸ்எம்எஸ் சலுகைகள் வேண்டுமால், மற்றொரு பக்காவான திட்டம் இருக்கிறது. இதில் மூன்று மாதங்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், விலை முந்தைய திட்டத்தைவிட மலிவாகவே இருக்கிறது.
வோடபோன் ஐடியா ரூ 470 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 470 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமே கிடைக்கும், அதே நேரத்தில் 84 நாட்கள் வேலிடிட்டியில் இந்த சலுகைகள் கொடுக்கப்படும். ஆகவே, இதை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் கால்கள் வருகிறது.
மொத்தமாக 900 எஸ்எம்எம்கள் கிடைக்கிறது. இந்த சலுகைகளை மட்டுமே கொடுக்கிறது. ஏனென்றால், இந்த திட்டத்தின் விலை ரூ 470ஆக மட்டுமே இருக்கிறது. இந்த விலைக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால் சிம் ஆக்டிவ் விரும்பும் கஸ்டமர்களுக்கு பக்காவாக இருக்கிறது. அதே நேரத்தில் வாய்ஸ் கால்களும் செய்ய கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








