50ஜிபி டேட்டா தரும் வோடபோனின் தரமான திட்டம்.! உடனே முந்துங்கள்.!
வோடபோன் நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் தரமான திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதன்படி வோடபோன் ஐடியாவின் ரூ.251-ப்ரீபெய்ட் திட்டமானது இப்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு வட்டங்களிலும் கிடைக்கிறது.

அதாவது ரூ.251-ப்ரீபெய்ட் திட்டமானது இம்மாத தொடக்கத்தில் குறிப்பிட்ட வட்டங்களில் மட்டுமே கிடைத்த நிலையில், தற்போது பான் இந்தியா அடிப்படையின் கீழ் கிட்டத்தட்ட வோடபோன் ஐடியாவின் அனைத்து வட்டங்களிலும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

ஆனாலும் வோடபோன் ஐடியாவின் ரூ.251 ப்ரீபெய்ட் திட்டமானது இன்னமும் உ.பி, ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் அசாம் போன்றவட்டங்களில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, குஜராத், பீகார், சென்னை, ஹரியானா, ஒடிசா, உ.பி. கிழக்கு, மற்றும் கேரளா போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் இந்த மாத தொடக்கத்தில் ரூ.251 அறிமுகமானது. தற்போது மேலே குறிப்பிட்ட சில வட்டங்களை தவிர்த்து மற்ற அனைத்து வட்டங்களிலும் அணுக கிடைக்கிறது. ரூ.251 திட்டமானது அனைத்து வட்டங்களுக்கான வோடபோன் வலைத்தளத்திலும், ஐடியா வலைத்தளத்திலும் நேரலையில் உள்ளது.

வோடபோன் ரூ.251 திட்டத்தின் நன்மைகள்
கொரோனா வைரஸ் பரவுவதற்கு மத்தியில் வீட்டில் இருந்தே வேலை செய்பவர்களுக்கு என்றே உருவாக்கப்பட்டது தான் இந்தரூ.251 திட்டம். மற்ற வழக்கமான டேட்டா வவுச்சரை போலவே, வோடபோன் ஐடியாவிலிருந்து ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ரூ.251 டேட்டா வவுச்சர் ஆனதும் தடையற்ற டேட்டா அனுபவத்தைப் பெற விரும்பும் வாடிக்கையாளரின் ஆக்டிவ் திட்டத்தின டேட்டா பேலன்ஸ் உடன் கூடுதல் டேட்டாவை சேர்க்க உதவும். அதாவது இந்த திட்டம் 50ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. பின்பு
28நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் இந்த திட்டம் வெளிவந்துள்ளது.

ஜியோவின் ரூ.251 டேட்டா வவுச்சரின் நன்மைகள்
ஜியோ நிறுவனமும் வீட்டில் இருந்தே வேலை செய்பவர்களுக்கு சிறப்பான மூன்று திட்டத்தை அறிமுகம் செய்தது. அந்த திட்டங்களில் ரூ.251 ஒன்றாகும். அதாவது இது 50ஜிபி அளவிலான டேட்டாவுடன் எந்தவிதமான வாய்ஸ் அழைப்பு நன்மைகளும் இல்லாமல் வருகிறது. இது 30நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.251 டேட்டா வவுச்சரின் நன்மைகள்
ஏர்டெல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ போலவே ரூ.251 டேட்டா வவுச்சர் திட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி ஏர்டெல் ரூ.251 டேட்டா வவுச்சர் ஆனது 50ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. ஆனால் இந்த வவுச்சரின் வேலிடிட்டி ஆனது வாடிக்கையாளர்களிடம் இருக்கும் அடிப்படை திட்டத்தின் மீது ஒற்றுப்போகும்.

டபுள் டேட்டா நன்மை
அன்மையில வோடபோன ஐடியா தனது 98-திட்டத்தில் டபுள் டேட்டா நன்மையை அறிவித்தது, அதாவது இந்த திட்டத்தில் முன்பு 6ஜிபி டேட்டா மட்டுமே கிடைத்தது,தற்போது 12ஜிபி அளவிலான வரம்பற்ற டேட்டாவை கிடைக்கும்படி செய்துள்ளது இந்நிறுவனம்.


Click it and Unblock the Notifications