வோடாபோன்-ஐடியாவின் தெறிவிக்கட்ட ரூ.24 பிளான்.!
. ரூ.24 வோடாபோன்-ஐடியா பிளான்: இந்நிலையில் பல்வேறு சலுகைகளுடன் வோடாபோன் நிறுவனம் ரூ.24க்கு குறைந்த ரீசார்ஜ் பிளானை வழங்கி அதிரவிட்டுள்ளது. இதில் ஏராளமான நன்மைகளும் அடங்கியுள்ளன.
வோடாபோன்-ஐடியா நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய தொலைப்பேசி நிறுவனமாக இருக்கின்றது.
தற்போது இந்திய தொலைப்பேசி சந்தையில் நிலவி வரும் அசாதாரண நிலையைத் தொடர்ந்து, பல்வேறு நிறுனங்கள் நஷ்டத்தில் இயங்க துவங்கின.

இதைத்தொடர்ந்து வோடாபோன்-ஐடியா, டாடா டோகோமோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் ரூ.35 குறைந்த பட்ச ரீசார்ஜை அறிவித்தன.
இதற்கு டிராய் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வோடாபோன் நிறுவனம் தற்போது, குறைந்த ரீசார்ஜ் பிளானை அறிவித்துள்ளது. இதில் ஏராளமான சிறப்புகளும் அடங்கியிருக்கின்றன.

ஜியோ வருகையால் ஆட்டம் கண்டன:
இந்திய தொலைப்பேசி சந்தைக்குள் 4ஜி தனது சேவையை ஜியோ நிறுவனம் துவங்கியது. மேலும் ஏராளமான சலுகைகளையும் வழங்கி குறைந்த காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றது.
இந்நிலையில் ஜியோ நிறுவனம் மேலும், பல்வேறு இலவச சலுகைகைள அறிவித்தது. இதனால் மற்ற நிறுவனங்களின் சிம்கார்ட்டை இரண்டாம் நிலைக்கு சென்றது. ஜியோவை முதன்நிலை சிம்கார்ட்டாக பயன்படுத்த துவங்கினர். இதனால் மற்ற நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட துவங்கியது.

ரூ.35 பிளான மற்ற நிறுவனங்கள் அறிவித்தன:
இதனால் நஷ்டத்தில் இருந்து தவிர்க்க ஏர்டெல், வோடபோன், டாடா டோகோமோ, ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் குறைந்தது ஒரு மாதத்திற்கு ரூ.35 ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றும் அறிவித்தன. மேலும், ரீசார்ஜ் செய்யாத நம்பரின் சேவையை துண்டிப்பதாகவும் தெரிவித்தன.

டிராய் எச்சரிக்கை:
இதைத்தொடர்ந்து குறைந்த பட்சம் ரீசார்ஜ் செய்யாத இணைப்புகளை எந்த வித முன்னரிப்பும் இன்றி துண்டிக்க கூடாது. மேலும், பல்வேறு சலுகைகளை வழங்கலாம் என்று டிராய் தொலைபேசி சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.

ரூ.24 வோடாபோன்-ஐடியா பிளான்:
இந்நிலையில் பல்வேறு சலுகைகளுடன் வோடாபோன் நிறுவனம் ரூ.24க்கு குறைந்த ரீசார்ஜ் பிளானை வழங்கி அதிரவிட்டுள்ளது. இதில் ஏராளமான நன்மைகளும் அடங்கியுள்ளன.

சிறப்புகள்:
வோடாபோன்-ஐடியா நிறுவனம் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை 100 நிமிடம் இலவசமாக பேசிக்கொள்ளலாம். மேலும், வோடாபோன்-வோடபோன் மற்றும் ஐடியா-ஐடியா நிறுவனங்களுக்கு இடையே செல்லுபடியாகும்.
மற்ற நிறுவனங்களுக்கு லோக்கல்- எஸ்டிடி 2.5 பைசா நிமிடத்திற்கு. 1 எம்பி டேட்டா ரூ.4., ரோமிங்கின் போது ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படும்.

எம்எம்எஸ் விவரங்கள்:
லோக்கல் எஸ்எம்எஸ்களுக்கு ரூ.1ம், நேஷனல் எம்எஸ்எம்ஸ்களுக் ரூ.1.5பைசாவும் கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த ரூ24 பிளான் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.


Click it and Unblock the Notifications








