Home
News

அறக்க பறக்க ரீசார்ஜ்.. 180 நாட்களுக்கு ஒரே ரீசார்ஜ்.. மாசம் ரூ.399 போதும்.. வாய்ஸ் கால்கள்.. 1.5 ஜிபி டேட்டா!

வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்கள் அறக்க பறக்க ரீசார்ஜ் செய்யும்படியான சலுகைகளுடன் புதிய திட்டம் களமிறங்கி இருக்கிறது. 180 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா, தினசரி எஸ்எம்எஸ் மற்றும் 16 ஓடிடி ஆப்களின் சலுகைகளையும் கொடுக்கிறது. இதுபோக வீக்கெண்ட் டேட்டா ரோலோவர், டேட்டா டிலைட்ஸ் போன்ற பிரத்யேக சலுகைகளையும் கொடுக்கிறது. இந்த புதிய வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டத்தின் (New Vodafone Idea Prepaid Plan) முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

1 மாத திட்டம், 2 மாத திட்டம் அல்லது 3 மாத திட்டமாக இல்லாமல் 6 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டுமானால், வோடபோன் ஐடியா ரூ 2399 ப்ரீபெய்ட் திட்டத்துக்கு (Vodafone Idea Rs 2399 Prepaid Plan) செல்லலாம். இது ஓடிடி பிரியர்களுக்கும் ஏற்ற திட்டமாகவும் இருக்கும். ஏனென்றால், 16 ஓடிடி ஆப்களின் சந்தாவை கொடுக்கிறது. இதற்கு ஏற்ப டேட்டாவும் கிடைக்கிறது.

அறக்க பறக்க ரீசார்ஜ்.. 180 நாட்களுக்கு ஒரே ரீசார்ஜ்.. மாசம் ரூ.399!

வோடபோன் ஐடியா ரூ 2399 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 2399 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 180 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கிறது. இதே நாட்களில் தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது.

இதில் 1.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை (Post Data) கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். ஆகவே, இந்த சலுகைகளே பட்டையை கிளப்பும்படி இருக்கின்றன. இதுபோக அன்லிமிடெட் நைட் டேட்டா (Unlimited Night Data) சலுகை மூலம் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் இலவச டேட்டா கிடைக்கிறது. மேலும், டேட்டா ரோலோவர் சலுகை வருகிறது.

இந்த சலுகை மூலம் வார நாட்களில் பயன்படுத்தாமல்விட்ட டேட்டாவை சனி மற்றும் ஞாயிறுகளில் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், டேட்டா டிலைட்ஸ் சலுகை மூலம் மாதத்துக்கு 2 ஜிபி டேட்டா பேக்கப்புக்காக கிடைக்கிறது. இவ்வளவு சலுகைகள் போக விஐ மூவிஸ் & டிவி சூப்பர் திட்டம் (Vi Movies & TV Super Plan) கிடைக்கிறது. இதன் மூலம் 16 ஓடிடி ஆப்கள் மற்றும் 400 டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம்.

சோனிலிவ் (Sony LIV), ஜீ5 (Zee5), மனோரமாமேக்ஸ் (ManoramaMAX), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஃபேன்கோட் (Fancode), அட்ரன்கீ (Atrangii), ஃபிளேஃபிளிக்ஸ் (PlayFlix), கிளிக் (Klikk), நம்மஃபிளிக்ஸ் (Nammaflix), சாவ்பால் (Chaupal), ஷீமாரூமீ (Shemaroo ME), யூப்டிவி (YuppTV), பாக்கெட்ஃபிலிம்ஸ் (PocketFilms), நெக்ஸ்ஜிடிவி (NexGTv) மற்றும் டிஸ்ட்ரோ டிவி (Distro TV) ஆகிய ஆப்கள் கிடைக்கின்றன.

இந்த ஓடிடிகளுடன் ரூ.175-க்கு திட்டம் தனியாகவும் கிடைக்கிறது. ஆனால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. ஆகவே, இது வோடபோன் ஐடியா கஸ்டமர்களுக்கு லாபம் தரக்கூடிய திட்டமாகவே இருக்கிறது. இந்த திட்டத்துக்கு மாத செலவை கணக்கிட்டால், ரூ.399ஆக இருக்கிறது. இந்த விலைக்கு டேட்டா, வாய்ஸ் மற்றும் ஓடிடி சலுகைகள் போதுமானதாகவே இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 2399 Plan With 180 Days Validity Unlimited Voice Calls 16 OTT Apps Check New Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X