Home
News

போட்டான் பாரு Vodafone Idea.. இனிமே ரூ.239 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா.. ஓடிடி சந்தா!

வோடபோன் ஐடியா கஸ்டமர்களிடம் ரூ.239 இருந்தால் போதும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் போக கூடுதலாக ஓடிடி சந்தாவும் கொடுக்கப்படுகிறது. கம்மியான விலைக்கு ஓடிடியுடன் ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய விரும்பினால், இந்த திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு பெறலாம். இந்த திட்டத்துக்கு கிடைக்கும் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

வோடபோன் ஐடியா ரூ. 239 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 239 Plan Details): ரூ.250 கூட செலவு வைக்காமல், 28 நாட்கள் வேலிடிட்டியை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Unlimited Local, STD & Roaming Voice Calls) கொடுக்கப்படும். 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.

போட்டான் பாரு Vodafone Idea.. இனி ரூ.239 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ்!

இந்த டேட்டா தினமும் கிடைக்கும் டேட்டா போல கிடையாது. இந்த திட்டத்துக்கு வரும் 28 நாட்கள் வேலிடிட்டிக்கும் மொத்தமாகவே இந்த 2 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். ஏனென்றால், இந்த திட்டத்தின் விலை அவ்வளவு மலிவாக இருக்கிறது. இந்த டேட்டா முடிந்தால் வழக்கமாக கிடைக்கும் போஸ்ட் டேட்டா கிடைக்குமே என்று நினைக்க வேண்டாம்.

இந்த 2 ஜிபி டேட்டா முடிந்தால், பிறகு 1 எம்பி டேட்டாவுக்கு 50 பைசா வீதம் கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும். இல்லையென்றால், டேட்டா பேக்குகளுக்கு வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் சென்று கொள்ளலாம். மேலும், 300 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. இதுவும் டேட்டாவை போலவே 28 நாட்களுக்கும் சேர்த்து கொடுக்கப்படுகிறது.

ஆகவே, அதற்கு பிறகு கட்டணங்கள் இருக்கும். இந்த ரூ.239 விலைக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளே போதுமானதாக இருக்கிறது. ஆனால், இதில் கூடுதல் சலுகையாக ஜியோஹாட்ஸ்டார் சந்தா (JioHotstar Subscription) கிடைக்கிறது. இந்த சந்தாவை 1 மாதத்துக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இது ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவாக இருக்கிறது.

லேட்டஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் ஜியோஹாட்ஸ்டாரில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்படுவதால், இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த திட்டம் வேண்டாம், தினசரி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா போன்ற சலுகைகளுடன் ஜியோஹாட்ஸ்டார் சந்தா கொண்ட ஆரம்ப விலை திட்டம் வேண்டும் என்று கேட்டால், அவர்களுக்கு மற்றொரு திட்டம் உள்ளது.

வோடபோன் ஐடியா ரூ. 399 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 399 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும், கூடுதலாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கொடுக்கப்படும். அதேபோல 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் கிடைக்கும். அரை நாளுக்கு அன்லிமிடெட் டேட்டா கொடுக்கப்படும்.

இந்த டேட்டாவை நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரையில் பயன்படுத்தலாம். இந்த டேட்டாவுக்கு லிமிட் கிடையாது. அதேபோல தினசரி டேட்டா 2 ஜிபிக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend data rollover) சலுகையும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கிடைக்கிறது. அடுத்து டேட்டா டிலைட்ஸ் சலுகையும் கொடுக்கப்படுகிறது.

இப்படி டேட்டா சலுகைகள் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த டேட்டாக்களை 28 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். மற்ற சலுகைகளை பொறுத்தவரையில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன. மாதாந்திர சந்தாவுடன் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் ஓடிடி கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 239 Plan 28 Days Validity Voice Calls JioHotstar Subscription
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X