Home
News

ஏலேய் Vodafone Idea இதான் உங்க ஐடியாவா? ரூ. 23 திட்டத்தில் மாற்றம்.. ரூ. 26 திட்டத்திற்கு தாவும் Vi மக்கள்..

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு என்ன தான் ஆச்சு என்று மக்கள் எல்லோரும் குழம்பும் விதத்தில், தொடர்ந்து பல மாற்றங்கள் தினசரி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்களின் விலை ஏற்றத்திற்கு பிறகு பல மாற்றங்களை டெலிகாம் வாடிக்கையாளர்கள் சந்தித்து வருகிறார்கள். இதற்கு நடுவே, அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் அதன் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரிக்காமல், அதன் திட்டங்களின் நன்மைகளில் தாராளத்தை காண்பித்து பல மாற்றங்களை மேற்கொண்டு மக்களை கவர்ந்து வருகிறது.

இதனால், பல லட்சம் தனியார் டெலிகாம் வாடிக்கையாளர்கள் இப்போது பிஎஸ்என்எல் நெட்வொர்க் பக்கம் மாறத்துவங்கிவிட்டனர். ஜியோ, ஏர்டெல், விஐ (Vi) போன்ற நிறுவனங்களும் அவற்றின் புதிய திட்டங்களை விலை அதிகரிப்புடன் அறிமுகம் செய்து, விற்பனை செய்து வருகின்றன. அணைத்து டெலிகாம் நிறுவனங்களும் ஒன்றுடன், ஒன்று போட்டிபோட்டுக் கொண்டு அவற்றின் திட்டங்களின் நன்மையை முடிந்த வரை அதிகரித்து மக்களை கவர்ந்து வருகின்றன.

ஏலேய் Vodafone Idea இதான் உங்க ஐடியாவா? ரூ. 23 திட்டத்தில் மாற்றம்..

ஆனால், இதற்கு நடுவே வோடபோன் ஐடியா நிறுவனம் தனது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பட்டியலில் இருந்த ஒரு திட்டத்தின் நன்மையை குறைந்துள்ளது. இந்த செயல் Vi பயனர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் பட்டியலில் வழங்கி வந்த விஐ ரூ. 23 ப்ரீபெய்ட் டேட்டா பிளான் (Vi Rs 23 prepaid data plan) நன்மை இப்போது குறைக்கப்பட்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வோடபோன் ஐடியா ரூ. 23 திட்டம் (Vodafone Idea Rs 23 Plan) திட்டம் ஒரு எமெர்ஜென்சி டேட்டா திட்டமாகும். இந்த திட்டம் அடிக்கடி விஐ வடிக்கையாளர்களால் அவசர தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் இதற்கு முன்பு வரை 1.2GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த நன்மையில் இருந்து வோடபோன் ஐடியா நிறுவனம் இப்போது 200MB டேட்டா நன்மையை குறைத்துள்ளது.

ஆம், இனி வோடபோன் ஐடியா ரூ 23 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 1.2GB டேட்டா நன்மை கிடைக்க போவதில்லை. அதற்கு பதிலாக வெறும் 1GB டேட்டா நன்மை மட்டுமே கிடைக்கப்போகிறது. அதிக டேட்டா தேவைப்படுபவர்களுக்கு வோடபோன் ஐடியா இப்போது ரூ. 26 திட்டத்தை வழங்குகிறது. இது 1.5GB டேட்டாவை வழங்குகிறது.

இதே விலையில், ஜியோ மற்றும் ஏர்டெல் என்ன வழங்குகிறது என்று பார்த்தால், இரண்டு நிறுவனங்களும் ரூ. 11 விலையில் டேட்டா பிளான் திட்டத்தை வழங்குகிறது. இது 10GB டேட்டா நன்மையுடன் 1 மணி நேர வேலிடிட்டி செல்லுபடியை வழங்குகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் 1 மணி நேரத்திற்குள் 10GB டேட்டாவை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஒருவேளை, 1 மணி நேரத்திற்குள் உங்களால் 10GB டேட்டா நன்மையை பயன்படுத்த முடியவில்லை என்றால், மிச்சமுள்ள டேட்டாவை உங்களால் பயன்படுத்த முடியாது என்பது கவனிக்கத்தக்கது. இதுவொரு எமெர்ஜென்சி டேட்டா பிளான் என்பதனால், 1 மணி நேரம் வரை மட்டுமே செல்லுபடியாகும்.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 23 Plan benefits Reduced Vi Customers Jumping To Vi Rs 26 Plan For Emergency Data Use
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X