Home
News

அடிச்சான் பாரு Vodafone Idea.. மாதம் ரூ.187 க்கு 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 30 ஜிபி டேட்டா!

வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு மாதத்துக்கு வெறும் ரூ.187 செலவில் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் வருடாந்திர திட்டம் கிடைக்கிறது. டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் கால்களின் சலுகைகளை மட்டுமே கொடுத்து உள்ளது. இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களானது, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை மட்டுமே கொண்ட திட்டங்களை வைத்திருக்கின்றன. ஆனால், ஜியோவை தவிர மற்ற 2 நிறுவனங்களும் லம்ப்-சம் டேட்டாவுடன் வருடாந்திர திட்டங்களை வைத்துள்ளன. இதில் வோடபோன் ஐடியாவானது முன்னணி நிறுவனங்களுக்கு நிகராக ஒரு திட்டத்தை வைத்து உள்ளது.

அடிச்சான் பாரு Vodafone Idea.. மாதத்துக்கு ரூ.187 க்கு 365 நாட்கள்!

ரூ.2249 விலைக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டம் கிடைக்கிறது. 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, மாதத்துக்கு ஏற்படும் செலவை கணக்கிட்டால் வெறும் ரூ.187 மட்டுமே தேவைப்படுகிறது. இது ரூ.200 விலையைவிட மலிவாக இருக்கிறது. இதிலேயே டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுத்து உள்ளது.

வோடபோன் ஐடியா ரூ. 2249 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 2249 Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய மூன்று சலுகைகள் மட்டுமே கிடைக்கும். இதை தவிர மற்ற சலுகைகளை எதிர்பார்க்க முடியாது. போஸ்ட் டேட்டா கொடுக்கப்படாது.

ஏனென்றால், மலிவான விலையில் வருடம் முழுவதும் சிம் ஆக்டிவ் மட்டுமல்லாமல், லம்ப்-சம் டேட்டாவை கொடுத்து உள்ளது. ஆகவே, வருடம் முழுவதுக்கும் 30 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இதை தேவைப்படும்போது கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவானது, வேலிடிட்டிக்கு முன்னதாக முடிந்துவிட்டால், போஸ்ட் டேட்டா கிடைக்காது.

1 எம்பி டேட்டாவுக்கு 50 பைசா செலுத்த வேண்டி இருக்கும். இருப்பினும், டேட்டா வவுச்சர்களை கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த டேட்டாவை போலவே 365 நாட்கள் முழுவதுக்கும் 3600 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்பட்டுவிடும். இதையும் தேவைக்கு ஏற்ப கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். வேலிடிட்டிக்கு முன்பே முடிந்தால், கட்டணம் இருக்கும்.

அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். ஜியோ நிறுவனத்தில் லம்ப்-சம் டேட்டாவுடன் வருடாந்திர திட்டங்கள் கிடையாது. ஆனால், வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை மட்டுமே கொண்ட வருடாந்திர திட்டம் இருக்கிறது. இதில் 336 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும்.

அதாவது, மாதத்துக்கு 28 நாட்கள் கணக்கில் வருடம் முழுவதும் வேலிடிட்டி கொடுக்கிறது. அதேபோல டேட்டா சலுகையை இந்த திட்டம் கொடுக்காது. வெறும் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை மட்டுமே கொடுக்கும். ஜியோ ஆப்களின் சலுகை கிடைக்கும். டேட்டா வவுச்சர்களை பெறும்பட்சத்தில் இந்த ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

ஜியோ ரூ.1748 திட்டம் (Jio Rs 1748 Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பெறும் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இதில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) கிடைக்கும். 3600 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும். ஜியோ டிவி (Jio TV), ஜியோ கிளவுட் (Jio Cloud) சலுகையை கொடுத்து உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 2249 Plan With 30GB Data 365 Days Validity Unlimited Calls 3600 SMS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X