Home
News

Vi போட்டான் பாருங்க.. அடுத்த 6 மாசத்துக்கு இதுதான் ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 5ஜி, 4ஜி டேட்டா!

வோடபோன் ஐடியா (Vodafone Idea) சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு அடுத்த 180 நாட்கள் அன்லிமிடெட் டேட்டாவுடன் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் உள்ளிட்ட சலுகைகள் வேண்டுமானால், இப்போது பார்க்க இருக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனங்களானது, நாடு முழுவதும் 5ஜி சேவையை கொடுக்கின்றன. இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா முற்றிலும் இலவமாக கொடுக்கப்படுகிறது. ஆனால், 4ஜி டேட்டாவுக்கு தினசரி லிமிட் வைக்கப்பட்டு உள்ளது. இதை வோடபோன் ஐடியா தட்டித் தூக்கி இருக்கிறது.

Vi போட்டான் பாருங்க.. அடுத்த 6 மாசத்துக்கு இதுதான் ரீசார்ஜ்!

4ஜி டேட்டாவையும் அன்லிமிடெட் சலுகையில் இலவசமாக கொடுக்கிறது. ஆகவே, 4ஜி ஸ்மார்ட்போனை வைத்து இருந்தாலும், 5ஜி ஸ்மார்ட்போனை வைத்து இருந்தாலும் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், 5ஜி சேவை மட்டும் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே கிடைக்கும். ஆகவே, இதை பார்த்துவிட்டு ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

இப்படி அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 4ஜி டேட்டாவை கொடுக்கும் திட்டங்களில் 180 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும் வோடபோன் ஐடியா ரூ.2248 திட்டம் (Vodafone Idea Rs 2248 Plan) அதிக வரவேற்பை பெற்று வருகிறது. 6 மாதங்களுக்கு வேலிடிட்டி அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் அன்லிமிடெட் டேட்டாவே இதற்கு காரணமாக இருக்கிறது.

வோடபோன் ஐடியா ரூ.2248 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 2248 Plan Details): முன்பே சொன்னதை போல இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 180 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படும். இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கிறது.

இந்த வாய்ஸ் கால்களை போலவே 180 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) மற்றும் அன்லிமிடெட் 4ஜி டேட்டா (Unlimited 4G Data) கிடைக்கும். இதில் போஸ்ட் டேட்டா கிடையாது. ஆகவே, எந்த டேட்டா லிமிட்டும் கொடுக்கப்படவில்லை. மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம்.

இதே 180 நாட்கள் வேலிடிட்டியுடன் ஓடிடி சந்தா கொண்ட திட்டம் வேண்டுமானால், வோடபோன் ஐடியாவில் மற்றொரு திட்டம் இருக்கிறது. ரூ.2,399 விலைக்கு இந்த திட்டம் கிடைக்கிறது. முந்தைய திட்டத்தை போல இதில் அன்லிமிடெட் 4ஜி டேட்டா கிடைக்காது. தினசரி லிமிட்டில் டேட்டா கொடுக்கப்படும். ஆனால், 5ஜி கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும்.

வோடபோன் ஐடியா ரூ.2399 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 2399 Plan Details): இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கும் அதே 180 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படும். நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் பெற்று கொள்ளலாம். 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

மேலும், பிஞ்ச் ஆல் நைட் டேட்டா, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர், டேட்டா டிலைட்ஸ் போன்ற பிரத்யேக டேட்டா சலுகைகளும் கிடைக்கும். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்களை தினந்தோறும் செய்து கொள்ளலாம். இதுபோக விஐ மூவிஸ் & டிவி (Vi Movies & TV) சந்தா கிடைக்கும். இதில் சோனிலிவ், ஜீ5 உள்ளிட்ட 19 ஓடிடி ஆப்கள் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 2248 Plan With 180 Days Validity Unlimited Calls Unlimited 5G 4G Data Everyday
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X