Home
News

வோடபோன் ஐடியா ஒரே போடு.. இனி ரூ.224-க்கு 30 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 4 ஜிபி டேட்டா!

வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் கஸ்டமர்கள் அடிமட்ட விலைக்கு கிடைக்கும் திட்ட வவுச்சர்களை (Plan Vouchers) ரீசார்ஜ் செய்ய விரும்பினால், அவர்களுக்கு 2 ஆப்ஷன் இருக்கின்றன. ஒரு திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியும் மற்றொரு திட்டம் மாதாந்திர வேலிடிட்டியும் கொடுக்கிறது. இதில் லம்ப்-சம் டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. இந்த திட்டங்களின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

டெலிகாம் நிறுவனங்களில் கம்மியான டேட்டாவுடன் திட்ட வவுச்சர்கள் கிடைக்கின்றன. இதில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ரூ.189 முதல் திட்டங்களை வைத்திருக்கின்றன. ஆனால், அவற்றில் 28 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான வேலிடிட்டி மட்டுமே கொடுக்கப்படுகிறது. அதேபோல 2 ஜிபி டேட்டா மட்டுமே மொத்த வேலிடிட்டிக்கும் கிடைக்கிறது.

வோடபோன் ஐடியா ஒரே போடு.. இனி ரூ.224-க்கு 30 நாட்கள் வேலிடிட்டி!

ஆனால், வோடபோன் ஐடியா நிறுவனமானது, ரூ 224 மற்றும் ரூ 232 ஆகிய 2 திட்ட வவுச்சர்கள் மூலம் 30 மற்றும் மாதாந்திர வேலிடிட்டி கொடுத்து இருக்கிறது. இதில் டேட்டாவும் 4 ஜிபி கிடைக்கிறது. இருப்பினும், முக்கியமான ஒரு சலுகை இதில் கிடைக்காது. அதை என்ன என்பதை இந்த திட்டங்களின் முழு விவரங்களை பார்க்கும்போது தெரிந்து கொள்ளுங்கள்.

வோடபோன் ஐடியா ரூ 224 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 224 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) டேட்டா மற்றும் வாய்ஸ் கால்கள் சலுகைகள் மட்டுமே கிடைக்கும். ஆகவே, எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்காது. இருப்பினும், 30 நாட்களுக்கு சிம் ஆக்டிவிட்டி கிடைப்பதால், இன்கம்மிங் எஸ்எம்எஸ்களை பெற்று கொள்ளலாம்.

இதே 30 நாட்கள் முழுவதுக்கும் 4 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்படும். இந்த லம்ப்-சம் டேட்டாவுக்கு பிறகு உங்களுக்கு போஸ்ட் டேட்டா கிடைக்காது. ஆகவே, டேட்டா வவுச்சர்கள் தேவைப்படலாம். இல்லை, வாய்ஸ் கால்கள் மட்டுமே போதும் என்றால், இந்த திட்டம் பக்காவாக இருக்கிறது. ஏனென்றால், 30 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் வருகிறது.

ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roamimg Voice Calls) சலுகைகள் கிடைக்கிறது. இந்த சலுகைகளை மட்டுமே இந்த வோடபோன் ஐடியா ரூ 224 திட்டம் கொடுக்கிறது. இதே போல சலுகைகளுடன் மாதாந்திர வேலிடிட்டி வேண்டுமானால், அடுத்த திட்டத்துக்கு செல்லலாம்.

வோடபோன் ஐடியா ரூ 232 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 232 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் முந்தைய திட்டத்தில் கிடைத்த அனைத்து சலுகைகளும் கிடைக்கிறது. ஆனால், வேலிடிட்டி மட்டும் காலண்டர் மாத சலுகையில் கிடைக்கிறது. அதாவது, நீங்கள் எந்த தேதியில் ரீசார்ஜ் செய்கிறீர்களோ அடுத்த மாதம் அதே தேதி வரையில் சலுகைகள் கிடைக்கும்.

ஆகவே, 31 நாட்களை கொண்ட மாதத்தில் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு, முந்தைய திட்டத்தைவிட 1 நாள் கூடுதலாக சலுகை கிடைக்கிறது. மற்ற சலுகைகளை பார்க்கையில், இதிலும் டேட்டா மற்றும் வாய்ஸ் கால்கள் சலுகை மட்டுமே கிடைக்கிறது. எஸ்எம்எஸ் சலுகை மற்றும் போஸ்ட் டேட்டா சலுகை கொடுக்கப்படவில்லை.

இதை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 4 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கொடுக்கப்படும். இதை ஒரு மாதம் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் போதும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டங்கள் பக்கா தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 224 Plan With Unlimited Calls 4GB Data 30 Days Validity Check Plan Vouchers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X