செஞ்சி விட்ட வோடபோன்.. மாதம் ரூ.363 போதும்.. 180 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள்.. அன்லிமிடெட் 5ஜி, 4ஜி டேட்டா!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்கிறது. ஆனால், 4ஜி டேட்டாவுக்கு தினசரி லிமிட் இருக்கிறது. அதுவே, வோடபோன் ஐடியாவில் (Vodafone Idea) பார்த்தால், 4ஜி டேட்டாவும் அன்லிமிடெட் சலுகையில் கிடைக்கிறது. ஆகவே, நாள் முழுவதும் லிமிட் இல்லாத டேட்டா கிடைக்கும்.
தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டா, 2 ஜிபி டேட்டா என்று 4ஜி டேட்டாவுக்கு மட்டும் லிமிட் இருக்கிறது. இந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கும். ஆனால், இந்த வோடபோன் ஐடியா திட்டத்தில் ரீசார்ஜ் செய்த பிறகு வேலிடிட்டி முழுவதும், எந்த லிமிட்டும் இல்லாமல், டேட்டா கிடைக்கும். 4ஜி ஸ்மார்ட்போன் இருந்தாலும் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும்.

வோடபோன் ஐடியா ரூ.2180 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 2180 Plan Details): இந்த வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 180 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, 6 மாதங்களுக்கு டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். மாத செலவை கணக்கிட்டால் ரூ.363 மட்டுமே இந்த திட்டத்துக்கு தேவைப்படுகிறது.
இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு 180 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) கிடைக்கும். வோடபோன் ஐடியா கஸ்டமர்களிடம் 4ஜி ஸ்மார்ட்போன் இருந்தால், அன்லிமிடெட் 4ஜி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். 5ஜி ஸ்மார்ட்போன் இருந்தால், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். தினசரி லிமிட் கொடுக்கப்படவில்லை.
ஆனால், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 5ஜி சேவைகள் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, அந்த நகரங்களில் இருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். தமிழ்நாட்டில் சென்னை, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் வோடபோன் ஐடியாவின் 5ஜி சேவைகள் கிடைக்கின்றன.
மேலும், புதுச்சேரியிலும் வோடபோன் ஐடியா 5ஜி சேவைகள் கிடைக்கின்றன. மற்ற நகரங்களில் தொடங்கப்பட இருக்கின்றன. ஆகவே, இந்த பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவானது, இந்த திட்டத்தின் வழியாக கிடைக்கும். இந்த டேட்டா சலுகை போக நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம்.
அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை இந்த வோடபோன் ஐடியா ரூ.2180 திட்டம் கொடுத்துள்ளது. ஆகவே, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கிறது. இந்த சலுகைகளை மட்டுமே இந்த வோடபோன் ஐடியா ரூ.2180 திட்டம் கொடுத்து இருக்கிறது. இதைவிட கம்மியான விலைக்கும் 180 நாட்கள் திட்டம் இருக்கிறது.
ஆனால், இதில் தினசரி டேட்டா கொடுக்கப்படும். ஆகவே, அந்த லிமிட் முடிந்தவுடன் 64 கேபிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா குறையும். மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தில் கிடைக்கும் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வோடபோன் ஐடியா ரூ.1749 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1749 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 180 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் வீக்கெண்ட் டேட்டா ரோலோவர், நைட் டேட்டா கிடைக்கும்.


Click it and Unblock the Notifications