கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்கள் 5ஜி திட்டங்களின் வருகையால், ரீசார்ஜ் கட்டணத்தை அதிகரிக்க திட்டமிட்டிருக்கும் நேரத்தில் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது, வெறும் ரூ.202 மதிப்புள்ள திட்டத்தில் 13 ஓடிடி சந்தா, 400 டிவி சேனல்கள் சந்தாவை அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளன. ஏற்கனவே, 2024ஆம் ஆண்டின் 2ஆம் பாதியில் 5ஜி திட்டங்களின் அறிவிப்பு இருக்கும் என்று டெலிகாம் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டன. இந்த நேரத்தில் கட்டண உயர்வு பேச்சும் அடிபடுகிறது.

இதனால், 5ஜி திட்டங்களின் வருகையால், கூடுதலாக கட்டணங்கள் விதிக்கப்படும் அல்லது 4ஜி திட்டங்களின் சலுகைகளை குறைத்து 5ஜி சேவைக்கு கஸ்டமர்களை மாற்றும் முயற்சியில் டெலிகாம் நிறுவனங்கள் ஈடுபடலாம். எப்படி பார்த்தாலும், ஜூன் மாதத்துக்கு பிறகு டெலிகாமில் மாற்றம் வருவது உறுதியாகிவிட்டது.
இப்படி ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களின் கட்டண உயர்வு குறித்து டெலிகாம் மார்கெட் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், வோடபோன் ஐடியா நிறுவனம் தரமான வேலையை பார்த்துள்ளது. ஏற்கனவே, அதன் கஸ்டமர்களிடம் மிகப்பெரும் வரவேற்பு பெற்ற விஐ மூவிஸ் & டிவி (Vi Movies and TV) சந்தாவில் கூடுதல் சலுகைகளை சேர்த்துள்ளது.
இந்த சலுகையானது, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ் போன்ற 13 ஓடிடி ஆப்களின் சந்தாவையும், மொத்தமாக 400 லைவ் டிவி சேனல்களின் சந்தாவையும் கொடுக்கிறது. இந்த சந்தாக்கள் மொபைலில் மட்டுமல்லாமல், டிவிக்கும் பொருந்தக்கூடியதாகும். இதனால், வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் குஷியாகிவிட்டனர்.

என்னென்ன ஓடிடி சந்தா கிடைக்கும்? டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலிவ் (Sony LIV), மனோரமா மேக்ஸ் (Manorama MAX), ஃபேன்கோடு (Fancode), கிளிக் (Klikk), சவ்பால் (Chaupal), நம்மஃபிளிக்ஸ் (Nammaflix, பிளேஃபிளிக்ஸ் (PlayFlix), ஹங்கமா (Hungama) ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
அதேபோல டிஸ்கவரி (Discovery), ஷீமாரூமீ (Shemaroo ME), டிஸ்ட்ரோ டிவி (Distro TV), யூப்டிவி (YuppTV) மற்றும் நெக்ஸ்ஜிடிவி (NexGTv) ஆகிய ஆப்களின் சந்தாவும் கொடுக்கப்படுகிறது. இதுபோக 400 லைவ் டிவி சேனல்களை வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் மொபைல் மற்றும் டிவியில் விஐ மூவிஸ் ஆப் மூலம் பார்த்து கொள்ளலாம்.
இந்த சந்தாவானது, டிவி மற்றும் மொபைல் யூசர்களுக்கு பொருந்துவதால், ஆண்ட்ராய்டு டிவி (Android TV), கூகுள் டிவி (Google TV), ஆண்ட்ராய்டு மொபைல் (Android Mobile), ஐஓஎஸ் மொபைல் (iOS Mobile), அமேசான் ஃபயர்ஸ்டிக் டிவி (Amazon Firestick TV) மற்றும் வெப்சைட் மூலம் லாகின் செய்து ஸ்ட்ரீமிங் செய்து கொள்ளலாம்.
கட்டணம் எப்படி? விஐ மூவிஸ் & டிவி சந்தாவில் 2 திட்டங்கள் இருக்கின்றன. இந்த திட்டங்கள் முழுக்க முழுக்க ஓடிடி மற்றும் டிவி சேனல்கள் சந்தாக்களை மட்டுமே கொடுக்கின்றன. டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை எதிர்பார்க்க முடியாது. ஆகவே, இந்த சலுகைகளை பெற பேஸ் ப்ரீபெய்ட் திட்டம் இருக்க வேண்டும்.
ஏற்கனவே இருக்கும் திட்டத்தில் கூடுதல் ஓடிடி திட்டமாக இதை சேர்த்து கொள்ளலாம். முதலில் ரூ.202 மதிப்புள்ள திட்டம் இருக்கிறது. இதில் 1 மாதத்துக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் மேற்கூறிய ஓடிடி மற்றும் டிவி சேனல்களை பாத்து கொள்ளலாம். இதே சலுகைகள் போஸ்பெய்ட் கஸ்டமர்களுக்கு ரூ.199 விலையில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








