அம்பானி பிளானாச்சே.. வெறும் ரூ.202 போதும்.. 13 ஓடிடி சந்தா.. ஹாட்ஸ்டார் TO சோனிலிவ்!
ஒட்டுமொத்த ஓடிடி பிரியர்களையும் தட்டித்தூக்கும் விதமாக ஜியோ (Jio) நிறுவனம் ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை சமீபத்தில் களமிறக்கியது. இந்த திட்டத்துக்கு நிகராக வோடபோன் ஐடியா நிறுவனமும் ஒரு திட்டத்தை கையிலெடுத்துள்ளது. வெறும் ரூ.202 விலையில் 13+ ஓடிடி சப்ஸ்கிரிப்ஷனை வழங்குகிறது.
வோடபோன் ஐடியா ரூ 202 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 202 Plan Details): இந்த திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற எந்தவொரு சலுகைகளும் கொடுக்கப்படவில்லை. முழுக்க முழுக்க ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷன் மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த திட்டத்தின் சலுகைகளை பெற பேஸ் பிளான் இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு விஐ மூவிஸ் & டிவி ப்ரோ (Vi Movies & TV Pro) சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. இந்த சப்ஸ்கிரிப்ஷனின் கீழ் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் 13+ ஓடிடி ஆப்களை (OTT Apps) பயன்படுத்தி கொள்ள முடியும்.
இந்த பட்டியலில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலிவ் (SonyLiv), சன்நெக்ஸ்ட் (SunNXT), யூப் டிவி (Yupp TV), ஷீமாரூமி (Shemaroo Me), ஹங்கமா (Hungama) மற்றும் டிஸ்கவரி (Discovery) உள்ளிட்ட முன்னணி ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷனும் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு ஒரு மாதம் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.
டேட்டா, வாய்ஸ் கால்கள் அல்லாமல், ஓடிடி சலுகையை மட்டுமே விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த வோடபோன் ஐடியா ரூ 202 திட்டம் நல்ல தேர்வாக இருக்கும். ஒருவேளை ஓடிடி சலுகையோடு வாய்ஸ், டேட்டா வேண்டுமானால், ரூ 399 விலையில் கிடைக்கும் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
வோடபோன் ஐடியா ரூ 399 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 399 Plan Details): இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) வாடிக்கையாளர்கள் செய்து கொள்ளலாம். அதோடு நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 70 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

இந்த 2.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டாவை பயன்படுத்த முடியும். இந்த திட்டத்தில் பிஞ்ச் ஆல் நைட் (Binge All Night) டேட்டா சலுகையின் கீழ் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டாவானது, 2.5 ஜிபியில் இருந்து கழிக்கப்படாது. முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதேபோல வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) சலுகையின் கீழ் வார நாட்களில் பயன்படுத்தாமல்விட்ட திட்டத்தின் டேட்டாவை வார இறுதி நாட்களில் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்தில் விஐ மூவிஸ் மற்றும் டிவி சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. அதோடு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது.

இந்த சப்ஸ்கிரிப்ஷனை 3 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இருப்பினும், இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், கூடுதலாக 5 ஜிபிக்கான டேட்டா வவுச்சர் கொடுக்கப்படுகிறது. இதை 3 நாட்களுக்குள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
அண்மையில் ஜியோ நிறுவனம், ரூ 398 விலையில் சோனிலிவ், ஜீ5, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜியோசினிமா பிரீமியம், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் உள்ளிட்ட 14 ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் கொண்ட புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது. இதற்கு போட்டியாகவே வோடபோன் ஐடியா நிறுவனம், இந்த திட்டத்தை களமிறக்கியிருக்கிறது.


Click it and Unblock the Notifications








