வோடபோன் ஐடியா அறிமுகம் செய்த ரூ.200 திட்டம்.. 200 லைவ் சேனல்கள்.. 20 OTT சந்தா.. வேலிடிட்டி?
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் தற்போது மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது வோடபோன் ஐடியா நிறுவனம். அதாவது தற்போது இந்நிறுவனம் ரூ.200 ப்ரீபெய்ட் பேக்கை தான் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் நன்மைகளை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
வோடபோன் ஐடியா ரூ.200 பிளான் (vodafone idea Rs 200 Plan) ஆனது மொத்தம் 30ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் மூலம் 20 ஓடிடி சந்தாவை பெற முடியும். அதாவது ஜியோஹாட்ஸ்டார், ஜீ5, சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Liongates Play), சாவ்பால் (Chaupal), மனோரமா மேக்ஸ் (ManoramaMAX), கிளிக் (Klikk) போன்ற 20 ஓடிடி ஆப்களை இலவசமாகப் பயன்படுத்த முடியும்.

அதேபோல் 200-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை வழங்குகிறது வோடபோன் ஐடியா ரூ.200 பேக். அன்லிமிடெட் 5ஜி நன்மையை வழங்ககிறது இந்த திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தை பெறுவதற்கு உங்களிடம் ஏற்கனவே ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் (Active Prepaid Plan) இருக்க வேண்டும்.
குறிப்பாக ஓடிடி மற்றும் லைவ் டிவி சேனல்கள் மட்டும் எதிர்பார்க்கும் வோடபோன் ஐடியா பயனர்கள் இந்த ரூ.200 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. அதேபோல் ஜியோ நிறுவனம் இதேபோன்று இரண்டு திட்டங்களை வைத்துள்ளது. அந்த திட்டங்களின் நன்மைகளையும் இங்கே பார்க்கலாம்.
ஜியோ ரூ.200 திட்டம் (Jio Rs 200 Plan) ஆனது 1000+ லைவ் டிவி சேனல்களை தருகிறது. அதாவது இதில் பிரீமியம் சேனல்கள் உடன் சோனி என்டர்டெயின்மென்ட் (Sony Entertainment), சன் டிவி நெட்வொர்க் (Sun TV Network), வார்னர் ப்ரோஸ் (Warner Bros), டிஸ்கவரி ( Discovery), ஈடிவி (ETV) போன்ற பல சேனல்கள் கிடைக்கின்றன.
இந்த சேனல்களை ஜியோஸ்டார் (JioStar) மற்றும் ஜியோ டிவி (Jio TV) ஆகிய ஆப்களில் பார்த்துக் கொள்ளலாம். குறிப்பாக இந்த லைவ் சேனல்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
யூடியூப் பிரீமியம், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு (Amazon Prime Video Mobile Edition), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி+ (Discovery+), சன் நெக்ஸ்ட் (Sun NXT), ஹோய்சோய் (Hoichoi) போன்ற 15 ஓடிடி சந்தா வழங்குகிறது ஜியோ ரூ.200 ப்ரீபெய்ட் திட்டம்.
ஜியோவின் ரூ.200 திட்டம் மொத்தமாக 30ஜிபி டேட்டா வழங்கும். மேலும் இந் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்கப்படவில்லை. எனவே ஏற்கனவே, ஆக்டிவில் இருக்கும் ப்ரீபெய்ட் திட்டத்துடன் ஓடிடி மற்றும் லைவ் டிவி சேனல்கள் திட்டமாக இதை ஆட் செய்து கொள்ளலாம்.
ஜியோரூ.55 திட்டம் (Jio Rs 55 Plan) ஆனது ஓடிடி சந்தா நன்மையை வழங்காது. ஆனால் 1000 பிளஸ் லைவ் சேனல்களை வழங்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டம் மொத்தமாக 10ஜிபி டேட்டா நன்மையை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோஸ்டார் (JioStar) மற்றும் ஜியோ டிவி (Jio TV) வழியாக சோனி என்டர்டெயின்மென்ட் (Sony Entertainment), சன் டிவி நெட்வொர்க் (Sun TV Network), வார்னர் ப்ரோஸ் ((Warner Bros) டிஸ்கவரி Discovery), ஈடிவி (ETV) போன்ற 1000-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை பார்க்கலாம்.
ஜியோ ரூ.55 திட்டம் ஆனது எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு நன்மைகளை வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, ஆக்டிவில் இருக்கும் ப்ரீபெய்ட் திட்டத்துடன் லைவ் டிவி சேனல்கள் திட்டமாக இதை ஆட் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications