Vodafone Idea-க்கு இதுதான்.. இனிமே டேட்டாவுடன் ரூ.1999-க்கு 365 நாட்கள்.. கால்களுடன் ரூ.1849-க்கு 365 நாட்கள்!
வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்களுக்கு கிடைக்கும் புதிய வாய்ஸ் ஒன்லி திட்டத்தின் (Voice Only Plan) சலுகைகளையும் ஏற்கனவே லம்ப்-சம் டேட்டாவுடன் கிடைக்கும் வேல்யூ திட்டத்தின் (Value Plan) சலுகைகளையும் தெரிந்து கொண்டு, எதில் நல்ல சலுகைகள் கிடைக்கிறது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம். 365 நாட்கள் வேலிடிட்டியில் கிடைக்கும் இந்த 2 ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் (Prepaid Plan) பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.
டிராய் உத்தரவின்படி, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமே கிடைக்கும் திட்டங்களை ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் கொடுத்து வருகின்றன. ஆனால், இந்த திட்டங்களின் விலைகள் முன்பு கிடைத்ததை போலவே இருப்பதால், கஸ்டமர்களை அவ்வளவு வரவேற்பை பெறவில்லை. பின்வரும் திட்டங்களை பார்த்தால் உங்களுக்கு புரியவரும்.

வோடபோன் ஐடியாவில் ஏற்கனவே ரூ.1999 விலைக்கு லம்ப்-சம் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் சலுகைகளுடன் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய் திட்டம் கிடைக்கிறது. இப்போது, இதைவிட ரூ.150 விலை குறைவாக வாய்ஸ் ஒன்லி திட்டம் களமிறங்கி இருக்கிறது. இந்த விலைகளை பார்த்தால் பெரிய வித்தியாசம் இல்லாததுபோல இருக்கிறது.
வோடபோன் ஐடியா ரூ 1999 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs 1999 Prepaid Plan): இந்த வருடாந்திர திட்டத்துக்கு (Yearly Plan) 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, வருடம் முழுவதும் அன்லிமிடெட் எஸ்டிடி (Unlimited STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) உள்பட லோக்கல் கால்களின் சலுகை கிடைக்கிறது. இதில் டேட்டாவும் உங்களுக்கு கிடைக்கிறது.
ஆனால், லம்ப்-சம் சலுகையாக 24 ஜிபி மட்டுமே கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டா கிடையாது. ஆகவே, உங்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த வருடாந்திர திட்டத்தில் 3600 எஸ்எம்எஸ் சலுகைகளும் கிடைக்கின்றன. இந்த மூன்று சலுகைகளை தவிர வேறு சலுகைகள் கிடையாது. இப்போது, வாய்ஸ் ஒன்லி திட்டத்தை பார்ப்போம்.
வோடபோன் ஐடியா ரூ 1849 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs 1849 Prepaid Plan): இந்த வருடாந்திர திட்டத்துக்கும் அதே 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், டேட்டா சலுகை கிடையாது. இந்த டேட்டா சலுகை இல்லாததால், இதன் விலை ரூ.150 குறைக்கப்பட்டுள்ளது. ஆகவே, 24 ஜிபி இல்லாததால் ரூ.150 விலை குறைப்பா என்பது போல உங்களுக்கு தோன்றலாம்.
உண்மையில் அப்படித்தான் குறைக்கப்பட்டுள்ளது. இதர வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை பார்க்கையில் ஒரே மாதியாகவே இருக்கின்றன. ஆகவே, இந்த திட்டத்திலும் 365 நாட்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது. அதேபோல 3600 எஸ்எம்எஸ்களும் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது.
இந்த திட்டங்களில் எது பெஸ்ட்? டேட்டா மட்டுமே இதில் வேறுபடுவதால், வாய்ஸ் ஒன்லி திட்டமே கொஞ்சம் பெஸ்டாக இருக்கிறது. ஏனென்றால், 24 ஜிபி டேட்டாவுடன் கிடைக்கும் திட்டத்தைவிட ரூ.150 மலிவாக கிடைப்பதால், அந்த காசுக்கு நீங்கள் தேவைப்படும்போது டேட்டா வவுச்சர்களை பயன்படுத்தி கொள்ளலாம். டேட்டா வவுச்சர்கள் ரூ.48 முதல் கிடைக்கின்றன.
இந்த விலைக்கு 6 ஜிபி கிடைக்கிறது. ஆனால், இதை 24 ஜிபிக்கு கணக்கிட்டால், ரூ.192 செலவாகிறது. ஆகவே, விலையின்படி பார்த்தால் எந்த திட்டமும் பெஸ்ட் கிடையாது. டேட்டா தேவைப்படாதபட்சத்தில் மட்டுமே வாய்ஸ் ஒன்லி திட்டம் உங்களுக்கு ரூ.150 விலை குறைப்பில் பெஸ்டாக கிடைக்கிறது. ஆனால், அதற்கும் ரூ.1849 செலவு செய்து ரீசார்ஜ் செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications








