Home
News

வோடபோன் ஐடியா ரூ.199 மற்றும் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டங்கள்: என்னென்ன நன்மைகள்.!

வோடபோன் ஐடியா நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட அருமையான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் திட்டங்கள் பட்ஜெட் விலையில் கிட்டத்தட்ட அனைத்து நன்மைகளுடன் வெளிவருகிறது. மேலும் இப்போது வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.199 மற்றும் ரூ.219 திட்டங்களின நன்மைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 வோடபோன் ஐடியா ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ், வி மூவிஸ் & டிவி அடிப்படை சந்தா (லைவ் டிவி, நியூஸ், திரைப்படங்கள் மற்றும் ஒரிஜினல்ஸ்களை காண அனுமதிக்கும்) குறிப்பாக வோடபோன் ஐடியாவின் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும்.

 வோடபோன் ஐடியா ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் 2ஜிபி போனஸ் டேட்டா நன்மையும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதுதவிரவரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ், வி மூவிஸ் & டிவி பேஸிக்கிற்கு இலவச அணுகல் போன்ற பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன. மேலும் வோடபோன் ஐடியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த இரண்டு திட்டங்களைப் பார்ப்போம்.

 வோடபோன் ஐடியா ரூ.701 திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.701 திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.701 டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். மேலும் இந்த ரூ.701 திட்டத்தில் வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர் சலுகை, பிங்கே ஆல் நைட் அன்லிமிடெட் டேட்டா நன்மைகள், வி மூவீஸ் மற்றும் டிவி சந்தா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா
உள்ளிட்ட நன்மைகளும் உள்ளது. குறிப்பாக வோடபோன் ஐடியா இணையதளம் இந்த திட்டத்தின் கீழ் 32ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ஐடியா ரூ.901 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.901 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியாவின் ரூ.901 ப்ரீபெய்ட் திட்டம் தனிசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளது. மேலும் ரூ.901 திட்டத்தில் வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர் சலுகை. பிங்கே ஆல் நைட் அன்லிமிடெட் டேட்டா நன்மைகள், வி மூவீஸ்மற்றும்
டிவி சந்தா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா போன்ற பல நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளன. அதேபோல் வோடபோன் ஐடியா இணையதளம் இந்த திட்டத்தின் கீழ் 48ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில்

வோடபோன் ஐடியா நிறுவனம் 5ஜி சேவையை விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது வோடபோன் ஐடியா தற்போது 5ஜி சோதனையை செய்து வருகிறது. மேலும் ஏர்டெல், ஜியோ நிறுவனங்களும் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 199 and Rs 219 prepaid plans: What are the benefits!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X