Home
News

VI SIM வைத்து இருப்பவர்களுக்கு அடுத்த 365 நாட்களுக்கு இதுதான்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. ஆனால், டேட்டா இல்ல!

வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் சிம் கார்டை வைத்திருக்கும் கஸ்டமர்கள் மலிவான விலைக்கு வருடம் முழுவதும் வாய்ஸ் கால்களை பெற விரும்பினால், இப்போது பார்க்க இருக்கும் வாய்ஸ் ஒன்லி திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ நிறுவனம் கொடுப்பதை போலவே 3 மாதங்கள் மற்றும் 12 மாதங்கள் வேலிடிட்டி கொண்ட வாய்ஸ் ஒன்லி திட்டங்களை வோடபோன் ஐடியாவும் கொடுக்கிறது. ஏர்டெல் நிறுவனமானது, சமீபத்தில் 28 நாட்கள், 30 நாட்கள் மற்றும் 31 நாட்கள் வேலிடிட்டி கொண்ட வாய்ஸ் ஒன்லி திட்டங்களை களமிறக்கி கஸ்டமர்களை தட்டித்தூக்கி இருக்கிறது.

VI SIM வைத்து இருப்பவர்களுக்கு அடுத்த 365 நாட்களுக்கு இதுதான்!

இருப்பினும், வோடபோன ஐடியாவில் கிடைக்கும் வருடாந்திர வாய்ஸ் ஒன்லி திட்டம், அதிக கஸ்டமர்களால் ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. ஏனென்றால், ஜியோவின் வருடாந்திர வாய்ஸ் ஒன்லி திட்டத்தில் 336 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், இந்த வோடபோன் ஐடியா வாய்ஸ் ஒன்லி திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

வோடபோன் ஐடியா ரூ.1849 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1849 Plan Details): 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாக இந்த வோடபோன் ஐடியா ரூ.1849 திட்டம் கிடைக்கிறது. ஆகவே, 1 வருடம் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.

மொத்தமாக 3600 எஸ்எம்எஸ்களை இந்த வோடபோன் ஐடியா ரூ.1849 திட்டம் கொடுத்து இருக்கிறது. இந்த சலுகைகள் மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, வருடம் முழுவதும் சிம் ஆக்டிவ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் பக்காவாக இருக்கும். இதைவிட மலிவான விலைக்கு மற்றொரு வாய்ஸ் ஒன்லி திட்டம் இருக்கிறது.

வோடபோன் ஐடியா ரூ.470 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 470 Plan Details): 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாக இந்த வோடபோன் ஐடியா ரூ.470 திட்டம் கிடைக்கிறது. இந்த மூன்று மாதம் முழுவதும் முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்யலாம்.

ஆனால், 1000 எஸ்எம்எஸ்கள் மட்டுமே கிடைக்கும். இந்த சலுகைகளை தவிர வேறு சலுகைகள் கிடைக்காது. ஜியோ மற்றும் ஏர்டெல்லில் கூடுதல் சலுகைகள் இருக்கின்றன. அதாவது, ஜியோவில் ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் ஆப் சலுகைகள் கிடைக்கும். ஏர்டெல்லில் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் போன்ற சலுகைகள் கிடைக்கும்.

இதுபோன்ற சலுகைகளை வோடபோன் ஐடியா கொடுக்கவில்லை. இருப்பினும், வாய்ஸ் கால்கள் மற்றும் வேலிடிட்டியில் எந்த குறையும் இல்லை. இதைவிட மலிவான விலைக்கும் வாய்ஸ் ஒன்லி திட்டத்தை வோடபோன் ஐடியா கொடுக்கிறது. ஆனால், அந்த திட்டமானது, எச்எம்டி, நோக்கியா போன்ற பீச்சர் போன்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

வோடபோன் ஐடியா ரூ.140 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 140 Plan Details): இந்த திட்டத்துக்கு 15 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். வேறு எந்த சலுகைகளையும் இந்த திட்டம் கொடுக்காது. ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு இந்த ரூ.140 திட்டம் கிடைக்காது.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 1849 Plan And Rs 470 Plan With Unlimited Voice Calls Check Voice Only Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X