Home
News

அள்ளிக்கோங்க.. தினசரி ரூ.6 போதும்.. 30GB டேட்டா.. 30 நாட்கள் வேலிடிட்டி.. அறக்க பறக்கும் ரீசார்ஜ்!

ஆன்லைன் கேமிங், ஓடிடி பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப கம்மியான விலையில் 30 நாட்கள் வேலிடிட்டியோடு தினசரி 1 ஜிபி டேட்டா சலுகையை கொடுக்கும் வோடபோன் ஐடியா ரூ 181 திட்டத்தை (Vodafone Idea Rs 181 Plan) பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

வோடபோன் ஐடியா ரூ 181 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 181 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, டேட்டா சலுகையை மட்டுமே கொண்டுள்ளது. ஆகவே, இந்த திட்டத்தில் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சலுகைகள் வழங்கப்படாது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு நளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 30 ஜிபி டேட்டா ஒதுக்கப்படும்.

அள்ளிக்கோங்க.. தினசரி ரூ.6 போதும்.. 30GB டேட்டா.. 30 டேஸ் வேலிடிட்டி!

இந்த மொத்த டேட்டாவுக்கான தொகையை ஒரு நாளுக்கு கணக்கிட்டு பார்த்தால், வெறும் ரூ.6 செலவில் உங்களுக்கு 1 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இதுவே வோடபோன் ஐடியாவில் 1 ஜிபி டேட்டாவை மட்டுமே ரீசார்ஜ் செய்ய வேண்டுமானால், ரூ.19 செலுத்த வேண்டும். ஆகவே, இந்த திட்டம் எப்படி பார்த்தாலும் மிகுந்த நன்மையை கொண்ட திட்டமாகவே இருக்கிறது. இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

இதே வேலிடிட்டியோடு, இந்த திட்டத்தைவிட ரூ.30 கம்மி விலையில் கிடைக்கும் மற்றொரு டேட்டா திட்டத்தில் 90 நாட்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவுடன் டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினசரி டேட்டா கிடையாது. இருப்பினும், லம்ப்சம் டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் சலுகைகள் மற்றும் பலன்களை இப்போது பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ 151 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 151 Plan Details): இந்த திட்டத்தில் டேட்டா மற்றும் ஓடிடி சலுகைகள் மட்டுமே இருக்கிறது. முந்தைய திட்டத்தைப் போலவே வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்காது. இந்த திட்டத்தில் உங்களுக்கு தினசரி டேட்டாவுக்கு பதிலாக 8 ஜிபி லம்ப்சம் டேட்டா கொடுக்கப்படும்.

இந்த டேட்டாவுக்கு லிமிட் கிடையாது, வேலிடிட்டி நாட்களில் முழுவதும் கூட பயன்படுத்திக் கொள்ள முடியும். அதன்பின் பயன்படுத்தும் டேட்டாவுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த டேட்டா சலுகை போக 3 மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney Plus Hotstar Mobile) சந்தா வழங்கப்படுகிறது.

ஆகவே, 720p தரத்தில் ஹாட்ஸ்டார் வீடியோக்களை பார்த்துக்கொள்ளலாம். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் வேளையில், இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கும் 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

மேற்கூறிய 2 திட்டங்களுக்கும் உங்களிடம் பேஸ் ப்ரீபெய்ட் திட்டம் (Base Prepaid Plan) இருக்க வேண்டும். அதாவது, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் சலுகை கொண்ட ஏதாவதொரு பேஸ் திட்டத்தை ஏற்கனவே வைத்துக்கொண்டு, வெறும் ஓடிடி மற்றும் டேட்டாவுக்கு மட்டுமே இந்த திட்டங்களை பயன்படுத்தலாம்.

இந்த திட்டங்களுக்கு ஏற்ற பேஸ் ப்ரீபெய்ட் திட்டம் என்றால், அது ரூ.179 விலையில் கிடைக்கும் திட்டம் மட்டுமேயாகும். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி வீதம் மொத்தமாக 56 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படும். அதோடு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்துகொள்ள முடியும்.

அதுமட்டுமல்லாமல், 300 எஸ்எம்எஸ் சலுகையும் கொடுக்கப்படுகிறது. இதுபோக விஐ மூவிஸ் & டிவி பேஸிக் (Vi Movies & TV Basic) சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படும். இதன் மூலம் லைவ் டிவி சேனல்கள் மற்றும் மூவிக்களை பார்த்துக்கொள்ளலாம். இந்த தினசரி டேட்டா 2 ஜிபியை பயன்படுத்திய பின்பு ஒரு எம்பி டேட்டாவுக்கு 50 பைசா வசூலிக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 181 Plan With 1 GB Daily Data, 30 Days Validity Check Data Voucher Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X